50 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்த முயன்ற 3 பேர் கைது!!

Photo of author

By Parthipan K

50 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்த முயன்ற 3 பேர் கைது!!
தெலுங்கானா மாநிலம், ரேங்காரெட்டி பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு இருக்கும் போது 50 லட்சம் மதிப்பில் உள்ள தங்க கட்டிகளை கடத்த முயன்ற மூன்று பேர் சிக்கினர்.
போலீஸ் விசாரணையில் குற்றவாளிகளின் தலைவன் syed moiz pasha (37) , இவர் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வந்துள்ளார். சமீர் கான் (31) கடத்தல் பொருள்களை ஒரே இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும் கடத்தல்காரன்.
Mohd Arshad (41) இவர் கடத்தல் பொருளை விற்று பணம் கொடுப்பவர்.
இவர்களிடமிருந்து போலீசார் 6 தங்க கட்டிகளும், 13 பாஸ்போர்ட், 2 தங்கம் விற்ற ரசிதையும் பறிமுதல் செய்தனர்.
பாட்ஷா என்பவர் டூரிஸ்ட் விசாவில் மக்களை இங்கிருந்து துபாய்க்கு அனுப்பி வைத்து அங்கிருந்து தங்கத்தை கடத்தி வர ஏற்பாடு செய்பவர்.
சமீர் கான் துபாய்க்கு சென்று தங்கத்தை கொண்டு வருவார். போலீஸ் விசாரணை போது சமீர் கூறியது, நான் இதற்கு முன்பு ஐந்து முறை துபாய் சென்று தங்கங்களை கடத்தி வந்துள்ளேன், கடத்தி வந்த தங்கத்தை நான் அர்சத்டம் கொடுத்து விடுவேன். இவ்வாறு மூவரும் DCP of Special operation team (SOT) Rajendranagar வாக்குமூலம் அளித்தனர்.