தமிழகத்தில் செயல்படும் பள்ளி மாணவர்களுக்கு அரசு வெளியிட்டுள்ள அட்டவணையின் படி தான் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் மாதத்தில் மட்டும் 15 விடுமுறை நாட்கள் அளிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்கள்:
தமிழக அரசு ஒவ்வொரு கல்வி ஆண்டின் ஆரம்பத்திலேயே அந்த வருடம் முழுவத்திற்குமான பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதன்படி, தான் மாணவர்களுக்கு அவ்வப்போது விடுமுறை அறிவிப்பு வழங்கப்படுகிறது. இதைத்தவிர அந்த சமயங்களில் ஏற்படும் ஏதேனும் திடீர் காரணங்கள் காரணமாகவும் பள்ளிகளுக்கு அவ்வப்போது விடுமுறை அளிக்கப்படும்.
இந்நிலையில் இந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் தமிழக பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 15 நாட்கள் விடுமுறை வர உள்ளது. அதாவது, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளை சேர்த்தும், நடக்க இருக்கும் அரையாண்டு தேர்வு விடுமுறை (24.12.2022 முதல் 01.01.2023), கிறிஸ்துமஸ் (25.12.2022) மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறையும் சேர்த்து மொத்தம் 15 நாட்கள் விடுமுறை விடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.