Breaking News, State

15 லட்சம் வரை கடன் தமிழக அரசின் திட்டம்!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

Photo of author

By CineDesk

15 லட்சம் வரை கடன் தமிழக அரசின் திட்டம்!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

CineDesk

Button

15 லட்சம் வரை கடன் தமிழக அரசின் திட்டம்!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழக அரசு, மக்களுக்கு பல்வேறு வகையான கடன் திட்டங்களை அளிக்கிறது. சிறு, குறு தொழில்களுக்கு கடன், தனி நபர் கடன், பெண்களுக்கான சிறு தொழில் கடன், சுய உதவி குழுக்கள் மூலம் கடன் என பல கடன் திட்டங்களை ஏழை, எளிய மக்களுக்காக தமிழக அரசு வழங்குகிறது.

தற்போது, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ) வழங்கும் கடன் திட்டம் பற்றி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அவர்கள், ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் மக்களுக்கு பொதுக்கால கடன் திட்டம் மற்றும் தனி நபர் கடன் திட்டத்தின் மூலமாக தற்போது அதிகபட்சமாக 15 லட்சம் வரையில் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்றும், பெண்களுக்கான புதிய போர்க்கால கடன் திட்டத்தின் கீழ் ரூ. 2 லட்சம் வரையிலும் மற்றும் சிறு கடன் திட்டம் மூலமாக ரூ. 1.25 லட்சம் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் டாப்செட்கோ வழங்கும் கடன்களை பெற ஆண்டு வருமானம் 3 லட்சம் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசின் இந்த கடன் திட்டங்களை மக்கள் பயன்படுத்தி தொழில் முன்னேற்றம் அடையலாம்.

திராவிட மண்ணில் பாஜக வர முடியாது என கூறுவது ஸ்டாலின் கற்பனையே -எல்.முருகன்!

காவஸ்கர் சட்டையில் தோனி கையெழுத்து!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!