3 நாட்களில் 15 கொலைகள் நடந்தது உண்மைதானா? சைலேந்திரபாபு வழங்கிய அதிரடி விளக்கம்!

0
128

தமிழ்நாட்டில் 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வெளியானது. தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடைபெற்றதாக மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கின்ற விளக்கத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக சில ஊடகங்களில் செய்திகள் மிகைப்படுத்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழகத்தில் கடந்த 22ஆம் தேதி 7 கொலைகளும், 23ஆம் தேதி 5 கொலைகள், மட்டுமே நிகழ்ந்திருக்கிறது என தெரிவித்துள்ளார் சைலேந்திரபாபு.

இதற்கு காவல்துறையின் சார்பாக காவல்துறையின் இயக்குனரே விளக்கமளித்தது சரியானது தான் என்றாலும் கூட ஒரு கொலையாக இருந்தாலும் கூட அது தமிழகத்தின் சட்ட ஒழுங்கின் மீது ஏற்பட்ட களங்கமாக தான் பார்க்கப்படும். ஆகவே இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினரும், முதலமைச்சரும், உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே சாதாரண மக்களின் வேண்டுகோளாக இருந்து வருகிறது.

மேலும் தெரிவித்திருக்கின்ற சைலேந்திரபாபு சில ஊடகங்களில் பட்டியலிடப்பட்ட பல்வேறு கொலைகள் தொடர்பான வழக்குகள் ஆகஸ்ட் மாதத்தில் முந்திய நாட்களில் நடைபெற்றவை அதோடு பெரும்பாலான கொலை சம்பவங்கள் குடும்ப உறுப்பினர்கள், தனிநபர்களிடையே முன்விரோதம் காரணமாக, நடைபெற்றுள்ளது என கூறியுள்ளார்.

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் 940 கொலைகள் நடந்திருக்கின்றன. கடந்த 2021 ஆம் வருடத்தில் இதே காலகட்டத்தில் 925 கொலைகளும், 2019 ஆம் ஆண்டு 1,041 கொலைகளும், நடந்திருக்கிறது.

எனவே 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த வருடம் 101 கொலை சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார் சைலேந்திரபாபு.

Previous articleசெம பிரில்லியன்ட் வித்தியாசமான எலக்ட்ரிக் சைக்கிள் கண்டுபிடிப்பு!. சாதனை செய்த இளைஞருக்கு பாராட்டு!..
Next articleபீஸ் கட்டாததால் கொடுமைப்படுத்தப்பட்ட பள்ளி மாணவர்கள்! ஆத்திரம் கொண்ட பெற்றோர்கள் செய்த காரியம்!