செம பிரில்லியன்ட் வித்தியாசமான எலக்ட்ரிக் சைக்கிள் கண்டுபிடிப்பு!. சாதனை செய்த இளைஞருக்கு பாராட்டு!..

0
100

செம பிரில்லியன்ட் வித்தியாசமான எலக்ட்ரிக் சைக்கிள் கண்டுபிடிப்பு!. சாதனை செய்த இளைஞருக்கு பாராட்டு!..

கீழடியை சேர்ந்தவர் தான் கௌதம்.இவர் ஒரு மெக்கானிக்கல் என்ஜினீயர் ஆவார். இவர் படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால் கட்டிட வேலைக்கும் மற்றும் பிற கிடைத்த வேலைகளையும் செய்து வந்துள்ளார்.இந்நிலையில் அவர் ஒரு எலக்ட்ரிக் சைக்கிள் ஒன்றை அவர் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து கௌதம் கூறியிருப்பதாவது, இந்த சைக்கிளின் மதிப்பு கிட்டதட்ட 35 ஆயிரம் ரூபாய் ஆகும்.இந்த சைக்கிளில் லித்தியம் பேட்டரி பயன்படுத்தியிருக்கிறேன்.

இந்த சைக்கிள் மூலம் 20 கிலோமீட்டரிலிருந்து 30 கிலோமீட்டர் வேகத்தில் இங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.இவை ஒரு இன்வெர்ட்டர் ஆகவும் பயன்படுத்தி கொள்ளலாம். வீட்டில் பவர் இல்லாத போது இந்த சைக்கிளை பயன்படுத்தி மின்சாரம் எடுத்துக் கொள்ளலாம்.வேறு எலக்ட்ரிக் சைக்கிள்களுக்கும், இந்த எலக்ட்ரிக் சைக்கிளுக்கும் உள்ள வித்தியாசம் இதில் ஒரு சிறப்பான கம்ப்ரசர் பொருத்தப்பட்டுள்ளது.அது என்னவென்றால் மூன்று பேட்டரிகளில் உள்ள சக்தியை இந்த கம்ப்ரசர் இழுத்து ஒரே பேட்டரிக்கு கொடுக்கும் என கூறினார். இவருடைய புதிய கண்டுபிடிப்புக்கு அவரது பெற்றோர்களான அருணகிரி மற்றும் கவிதா மேலும் அவரது நண்பர்கள் உதவி செய்து வருகின்றனர்.கௌதம் ஏற்கனவே ஒரு எலக்ட்ரிக் ஜீப் கண்டுபிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் அங்குள்ள ஊர் பொதுமக்கள் அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

 

author avatar
Parthipan K