தமிழக அரசு ஒரு பெற்றதிலிருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை அனைத்து தரப்பினருக்கும் செய்து வருகிறது அதோடு இந்த அரசு அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசு என முதலமைச்சர் ஸ்டாலின் நொடிக்கொருமுறை சொல்லி வருகிறார்.
அந்த விதத்தில் தான் அவருடைய செயல்பாடும் இருக்கிறது, ஆனால் திமுக கருணாநிதி காலத்தில் எல்லாம் இப்படி இல்லை அப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வந்தாலே அது பணக்காரர்களுக்கும், எஜமானர்களுக்குமான ஆட்சி என்று ஒரு பொது பெயர் தமிழகம் முழுவதும் இருந்தது.
ஆனால் தற்சமயம் அதனை மாற்றும் விதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் இதனை அனைத்து தரப்பு மக்களும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். இந்நிலையில், தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 15% போனஸ் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தீபாவளிக்குப் பின்னர் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் உற்பத்தியாளர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால், தீப்பெட்டி விலையை இரண்டு ரூபாயாக அதிகரிப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோருக்கு இருக்கக்கூடிய வங்கி கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் ஸலஃபைட் உள்ளிட்டவற்றை கொண்டு செல்வதற்கு மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழ் பெறும் முறை நீக்கப்பட வேண்டும், போன்ற தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.