பொங்கல் பரிசாக 1500! தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியேறிய முக்கிய தகவல்!!
வருடம் தோறும் தமிழக திருநாளாம் தைத்திங்கள் தமிழ்நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் பொங்கல் சார்பாக இலவச வேஷ்டி சேலை மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.
அதிமுக ஆட்சியில் இருந்தபோது 2000 ரூபாய் ரொக்கமாக வழங்கி மேற்கொண்டு பொங்கல் வைப்பதற்கு தேவையான மள்ளிகை பொருட்களையும் வழங்கினார். ஆனால் திமுக ஆட்சி வந்தவுடன் முதல் பொங்கல் திருநாள் அன்று வெறும் பொங்கல் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. பணம் ஏதும் வழங்கப்படவில்லை இது மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
சென்ற முறை போல இம்முறையும் பணம் ஏதும் தராமல் பொங்கல் தொகுப்பு மட்டும் வழங்கி விடுமா என்று பெரும் கேள்வி மக்கள் மத்தியில் இருக்கும் பட்சத்தில், இன்று மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மக்களுக்கு இலவச வேஷ்டி சேலை பொங்கல் வைப்பதற்கான பொருள்கள் மற்றும் ஆவின் நெய் உட்பட வழங்கி, 1500 ரூபாயை ரொக்கமாக வழங்குவதாகவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த பணத்தை எவ்வாறு விநியோகம் செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறுகின்றனர்.அந்தவகையில் இம்முறை பொங்கல் தொகுப்புடன் பொங்கல் பரிசாக ரூ.1500 வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.