DMK: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த வருடம் தொடங்க இருப்பதால் திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறது. தற்போது பீகாரில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்து காங்கிரஸ் மண்ணை கவ்வியது. இதனால் காங்கிரஸ் மீது திமுகவிற்கு பெரும் அதிருப்தி. அதுமட்டுமின்றி என்றைக்கும் இல்லாத அளவில் இம்முறை பெண்களின் வாக்கு சதவீதம் பீகாரில் அதிகரித்துள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது வங்கி கணக்குகளில் பத்தாயிரம் வழங்கியதுதான். அதேபோல திமுகவும் புதிய அறிவிப்பை வெளியிட உள்ளதாம். அந்தவகையில் பெண்களை கவர அவர்களின் அக்கவுண்டுக்கு 15000 ரூபாயை அனுப்ப உள்ளதாகவும் இது ரீதியான கலந்தோசனை நடைபெறுவதாக கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றனர். இதன் மூலம் பெண்கள் வாக்கு வங்கி அதிகரிப்பதோடு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியுமாம்.
ஆனால் பெண்களுக்கு திமுக கட்டணமில்லா பேருந்து, குடும்ப அட்டை தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர். இருப்பினும் பாஜக இதர மாநிலத்தில் செய்த தேர்தல் சூழ்ச்சி முறையை திமுக தன் வசப்படுத்தி செயல்படுத்த தயாராக உள்ளது. இதனை தமிழகத்தில் பாஜக எப்படி எதிர்த்து நிற்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

