மதிமுக தனிப்பட்ட வைகோ விற்கும் அவருடைய குடும்பத்திற்கும் பாடுபடும் இயக்கமல்ல ; தமிழ்நாட்டின் நலனுக்காக பாடுபடும் இயக்கம். மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்ற துரைசாமியின் கடிதத்தை மதிமுக அலட்சியப்படுத்தி வருகிறது.
மே 1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு மறுமலர்ச்சி தொழிலாளர்கள் முன்னணி சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைமை அலுவலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கொடி ஏற்றிய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் ,மதிமுக முக்கிய காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது என்றும் தமிழகம் முழுவதும் 70 சதவீதம் இடங்களில் மதிமுகவின் தேர்தல் நடைபெற்று வருகிறது என்றும் விரைவில் மதிமுக பொதுக்குழு நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் மதிமுக கட்சியின் அவைத்தலைவர் துரைசாமி அனுப்பிய கடிதம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், நாங்கள் அவரின் கடிதத்தை அலட்சியப்படுத்துகிறோம். இரண்டு வருடத்திற்கு கட்சியில் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் தற்பொழுது அறிக்கையை அறிவித்திருக்கிறார் என்றால் அது எந்த நோக்கத்துடன் இருக்கும்,எங்களுக்கு கட்சியை திமுகவுடன் இணைக்கும் எந்த நோக்கமும் எங்களுக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் 99.9 சதவீதம் தொண்டர்கள் எங்களோடு தான் இருக்கிறார்கள் என்றும், நாங்கள் சிலவற்றை இங்கு அலட்சியப்படுத்துகிறோம் நிராகரிக்கிறோம் என்றும் கூறினார். அதேபோல் எல்லா இடங்களிலும் தேர்தல் அமைதியாக ஒற்றுமையாக நடத்தது ,இனிமேல் அவரின் பேச்சுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
முன்னர் தொண்டர்களுக்காக மேடையில் பேசிய அவர், நெடுங்காலத்திற்கு முன்னர் தொடங்கியது தொழிலாளர் புரட்சி 1800 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தொழிலாளர்கள் 8 மணி நேரம்தான் வேலை என்று போராட்டம் நடத்தினார்கள். ஆயிரம் தொடர்ச்சியாக சிகாகோ நகரத்தில் தொழிலாளர்கள் போராடினார்கள்.
மே மூன்றாம் தேதி போராடியவர்கள் அனைவரும் தாக்கப்பட்டு அதிகமானோர் பலியானர்கள் படுகாயமும் அடைந்தனர். சென்னையில் கடற்கரையில் தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேரம் வேலை வ வு சிதம்பரம் பிள்ளையும் சேர்ந்து போராட்டம் நடத்தினார்கள் அப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு இடம் தலைநகர் சென்னை சென்றயாகும்.
தமிழ்நாட்டில் தொழிலாளர் தினத்திற்கு விடுமுறையை அறிஞர் அண்ணா அறிவித்தார் இந்தியா முழுவதும் மே ஒன்றாம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து பிரதமர் வி பி சிங் விடுமுறையை அறிவித்தார்
தொழிலாளர் உடைய உரிமையை காப்பதற்கு தான் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகிறோம் .தமிழ்நாட்டினுடைய நலனுக்காக தொடர்ந்து பாடுபடும் இயக்கம் மதிமுக இது தனிப்பட்ட வைகோ விற்கும் குடும்பத்திற்கும் பாடுபடும் இயக்கமல்ல.
துரை வைகோ அரசியலுக்கு வருகிறேன் என சொல்ல வில்லை. நானும் வா என்று சொல்லவில்லை. எனக்கு கொரோனா வந்ததினால் துரை வைகோ அரசியலுக்கு வர ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் ,
114 பேர்களில் 112 பேர் வேண்டும் என கையொப்பமிட்டனர். 2 பேர் வேண்டாம் என சொன்னார்கள்.
ஜனநாயகத்திற்காக நடக்கப்படும் இயக்கம் பத்திரிகைகளில் அதிகமான சலசலப்புகள் வரும் அதனை புறக்கணியுங்கள் அதற்கு கவலைப்படாதீர்கள், தமிழ்நாடு முழுவதும் 99% பேர் தொண்டர்கள் உணர்வோடு இருக்கிறார்கள் எனவும் கூறினார்.