பேருந்து நிலையத்தில் 16 வயது மாணவி மற்றும் 18 வயது மாணவனுக்கு டும் டும்!! வைரலாகும் வீடியோ!!

Photo of author

By Rupa

பேருந்து நிலையத்தில் 16 வயது மாணவி மற்றும் 17 வயது மாணவனுக்கு டும் டும்!! வைரலாகும் வீடியோ!!

குழந்தை திருமணம் என்பது சட்டத்திற்கு எதிரானது. அந்த வகையில் இக்காலகட்ட பள்ளி மாணவிகள் பலர் குழந்தை திருமணம் செய்து கொள்கின்றனர். வாலிபர்களின் காதல் வலையில் விழுந்து திருமணம் செய்த கொள்கின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் பட்ட பகலில் பேருந்து நிலையத்திலேயே குழந்தை திருமணம் அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் காலை மற்றும் மாலை மாணவர்கள் பேருந்து ஏறுவது வழக்கம்.

வழக்கம்போல பேருந்து ஏற வந்த 12 ஆம் வகுப்பு மாணவி பேருந்து நிறுத்தத்திலேயே திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் பல நாட்களாக பாலிடெக்னிக் படிக்கும் மாணவனை காதலித்து வந்துள்ளார். படிப்பை முடிக்கும் வரை பொறுக்க முடியாமல்,சிறு வயதிலேயே  பேருந்து நிலையத்தில் திருமணம் செய்துள்ளார். அந்த மாணவி பள்ளி சீருடையுடனும்  அந்த பாலிடெக்னிக் மாணவன் கல்லூரி சீருடையுடனும்  திருமணம் செய்து கொண்ட வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.