இதற்கெல்லாமா விஷம் குடிப்பாங்க! 16 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

Photo of author

By Kowsalya

அக்கா செல்போன் தரவில்லை என்பதால் மனமுடைந்து விஷம் குடித்து உயிரிழந்த 16 வயது சிறுமி. இந்த சம்பவம் அருப்புக்கோட்டை அருகே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அருப்புக்கோட்டையில் உள்ள சின்னசெட்டிகுறிச்சி என்ற ஊரில் வசித்து வருபவர் முருகன். இவருக்கு வயது 45.

முருகனின் மனைவி ராமலட்சுமி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகளின் பெயர் கார்த்திகா 19 வயதாகிறது. இளைய மகளின் பெயர் அபிநயா 16 வயது ஆகிறது. கொரோனா என்பதால் அக்கா தங்கை இருவரும் வீட்டில் இருந்துள்ளனர்.

வீட்டில் உள்ள ஒரே ஒரு மொபைல் போனை முருகன்தான் பயன்படுத்தி வந்து உள்ளார். கிடைத்த கொஞ்ச நேரங்களில் பொழுதைப் போக்குவதற்காக சமூக வலைத்தளங்களில் இருவரும் பொழுதை போக்கி உள்ளனர்.

இதனால் அபிநயா மற்றும் கார்த்திகா இருவருக்கும் அடிக்கடி சண்டைகள் வந்துள்ளது.

அதேபோல் தீபாவளி அன்று சகோதரிகள் இருவருக்கும் சமூக வலைதளங்களில் சென்று பார்ப்பதற்கு சண்டை வந்துள்ளது.

அப்பொழுது அபிநயா செல்போனை என்னிடம் தரவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். கார்த்திகாவோ ஏதோ விளையாட்டாக சொல்கிறாள் என்று கண்டுகொள்ளாமல் செல்போனில் மூழ்கியுள்ளார்.

கார்த்திகா கண்டுகொள்ளாமல் இருந்ததை பார்த்த அபிநயா ஆத்திரமடைந்து விவசாய நிலத்திற்கு பயன்படுத்துவதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார்.

அதை பார்த்த அவரது பெற்றோர்கள் பதறி அடித்துக்கொண்டு அருப்புக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் அபிநயாவின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். தகவலறிந்த போலீசார் இதன் பெயரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.