16 வயது சிறுமி கருமுட்டை விவகாரம்! ஈரோடு  மாவட்டத்தில் மருத்துவமனைகள் அனைத்தும்  இன்று செயல்படாது?

0
173
16-year-old girl's egg issue! Hospitals will not function today in Erode district?
16-year-old girl's egg issue! Hospitals will not function today in Erode district?

16 வயது சிறுமி கருமுட்டை விவகாரம்! ஈரோடு  மாவட்டத்தில் மருத்துவமனைகள் அனைத்தும்  இன்று செயல்படாது?

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்று விவகாரத்தில் சுதா மருத்துவமனை மற்றும் சுதா ஸ்கேன் மையத்திற்கு தமிழக அரசு சீல் வைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவின் படி மருத்துவக் குழுவினர் சுதா மருத்துவமனை மற்றும் சுதா ஸ்கேன் மையங்களுக்கும் சீல் வைத்தனர். மேலும் மருத்துவமனையில் புதிய நோயாளிகளை சேர்க்க தடை விதித்தும் சிகிச்சையில் உள்ள நோயாளிகளை 15 நாட்களுக்குள் திருப்பி அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவமனை நிர்வாகத்தினர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி சுதா மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையத்திற்கு வைத்த சீலை உடனடியாக அகற்ற உத்தரவு பிறப்பித்தார்.  இந்நிலையில் சுதா மருத்துவமனை வழக்கம்போல் செயல்பட்டு வந்தது. இதனையடுத்து  தமிழக அரசு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

மனுவை விசாரித்து ஐகோர்ட் சுதா மருத்துவமனை ஸ்கேன் மையத்தில் சீர் அகற்ற பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் சீல்வைக்க உத்தரவு பிறப்பித்தது. மேலும் இது தொடர்பாக சுதா மருத்துவமனையில் டாக்டர்கள் ஊழியர்கள் பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்  அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி நேற்று மருத்துவமனையின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனால் நேற்று இரவு சுதாம மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

மேலும் இந்நிலையில் சுதா மருத்துவமனைக்கு சீல் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளை சார்பில் இன்று ஒரு நாள் மட்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 250 தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் 800 டாக்டர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்ட தொடர்பாக அறிவிப்பு ஒவ்வொரு மருத்துவமனையின் முன்பும் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ள தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படவில்லை .மேலும் அனுமதி பெற்று சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு  வழக்கம் போல் சிகிச்சை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து அவசரகால சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் வழக்கம் போல் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் சி என் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அந்த அறிக்கையில் சுதா மருத்துவமனை 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இதில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்துறை  மருத்துவமனையாக உள்ள நிலையில் ஒரு பிரிவில் தவறு நடந்ததாக கூறி  மருத்துவமனைகளுக்கு சீல் வைப்பது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் கூறினார்.

மேலும் இந்த நடவடிக்கையை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் இன்று ஒரு நாள் மூடப்படும் புறநோயாளிகள் பிரிவு செயல்படாது எனவும் இது தொடர்பாக மாநில அளவில் போராட்டம் நடத்துவது குறித்து வரும் இரண்டு நாட்களில் முடிவு  எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

Previous articleதேனி மாவட்டத்தில் முதல் மேம்பாலம்! வளர்ச்சியின் முதல் படியாக மக்கள் ஆர்வம்!
Next articleபுளிய மரத்தில் மோதிய வேன் !..ஒருவர் சம்பவ இடத்தில் பலி..மற்றொருவர் நிலைமை கவலைக்கிடம்?..