பத்திரிகையாளர் முன் 162 எம்.எல்.ஏக்களை நிறுத்திய சிவசேனா? அமித்ஷா அதிர்ச்சி!

0
169

பத்திரிகையாளர் முன் 162 எம்.எல்.ஏக்களை நிறுத்திய சிவசேனா? அமித்ஷா அதிர்ச்சி!

மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ் அரசு இன்னும் ஓரிரு நாளில் தனது மெஜாரிட்டியை நிரூபிக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் பாஜக அரசுக்கு ஆதரவு கொடுத்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவு எம்எல்ஏக்கள் திடீரென சரத்பவாரின் அழைப்பை ஏற்று மீண்டும் சரத்பவார் பக்கம் திரும்பி உள்ளதாக அதிர்ச்சி தரும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இதனால் முதல்வர் பட்னாவிஸ் எப்படி மெஜாரிட்டியை நிரூபிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது

இன்று இரவு 7 மணிக்கு பத்திரிகையாளர்கள் முன் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி, மற்றும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் 162 பேர் அணிவகுப்பு செய்யப்பட்டார்கள் என்றும் இதனை அடுத்து பாஜக மற்றும் அஜித்பவார் கூட்டணி எப்படி மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது

இந்த நிலையில் தங்கள் பக்கமே போதுமான எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதால் தங்களை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும் என சிவசேனா கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

இந்த நிலையில் இது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் நாளை அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒரு வேளை நாளையே மெஜாரிட்டியை நிரூபிக்க முதல்வருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டால், பட்நாவிஸ் ஆட்சி கவிழ வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Previous articleஇராமசாமி படையாச்சி பிறந்தநாளை அரசு விழாவாக இனி கொண்டாடப்படும்! முதல்வர் எடப்பாடி அதிரடி உத்தரவு
Next articleநடிகர் சங்க தேர்தலையே நடத்த முடியாதவர்கள் நாட்டை வழிநடத்துவார்களா? ஓ.எஸ்.மணியன்