இன்று கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் இதோ!

0
174

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்று ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சேலம், கோவை, நீலகிரி, திருப்பத்தூர் மற்றும் கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டி இருக்கின்ற உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளைய தினம் கடலோர மாவட்டங்கள் மற்றும் கோவை, நீலகிரி உள்ளிட்ட இடங்கள் மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது. சென்னையை பொருத்தவரையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Previous articleநாட்டில் வெகுவாக குறைந்த தினசரி நோய் பாதிப்பு!
Next articleமயில் மோதியதால் மரணம்! புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த அவலம்!