உடலில் 13 இடத்தில் கத்திக்குத்து:! 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்! பிணமாக உடல் மீட்பு!

Photo of author

By Pavithra

உடலில் 13 இடத்தில் கத்திக்குத்து:! 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்! பிணமாக உடல் மீட்பு!

மதுரை மாவட்டம் வி.அம்மாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் தவுடன் குடும்பத்தினர்.இவரின் மனைவி முத்துலட்சுமி.இவர்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.இவர்களது மகள் ஜெய்சக்தி பாலா. இவருக்கு 17 வயதாகும் நிலையில்,
ஜெய்சக்தி பாலாவிற்கு கடந்த 7 மாதத்திற்கு முன்னர்,விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மத்திய சேவை பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

திருமணம் தொடர்பான தகவலை அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று,ஜெய்சக்தி பாலாவிற்கு 18 வயது பூர்த்தியான உடன் இருவரும் சேர்ந்து வாழலாம் என்று ஜெய்சக்தி பாலாவை பெற்றோருடன் அனுப்பி வைத்துவிட்டனர்.

தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்த ஜெய்சக்தி பாலா முந்தினம் இரவு அப்பகுதியில் உள்ள கண்மாய்க்கு சென்றுள்ளார்.வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்ப வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் ஜெய்சக்தி பாலாவை தேட ஆரம்பித்தனர். ஆனால் இரவு முழுவதும் தேடியும் ஜெய்சக்தி பாலா கிடைக்கவில்லை.மறுநாள் காலை ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.இதுதொடர்பாக காவல் துறையில் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.அவரின் உடலை சோதித்தபோது 13 இடத்தில் கத்திகுத்து இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த இடத்தைச் சுற்றிலும் ஏதேனும் தடயம் கிடைக்குமா என்று ஆய்வு செய்த காவல் துறையினருக்கு,ஜெய்சக்தி பாலா வெட்டுப்பட்டு கிடந்த இடத்தில் ஒரு ஹெட்செட் கிடைத்துள்ளது.இதனை தொடர்ந்து கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டு தடையங்கள் சேகரிக்கப்பட்டது.
இந்த தடயங்களிலுள்ள கைரேகையை வைத்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.