தொடர்ந்து உயரும் பெட்ரோல் விலை! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

Photo of author

By Sakthi

இந்தியாவை பொருத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், சென்ற சில மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்து வந்தது. அதற்கு காரணம் சமீபத்தில் நடைபெற்ற தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் தான் என்று சொல்லப்படுகிறது.

தேர்தல் சமயத்தில் ஒரு வேலை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி இருந்தால் அதன் தாக்கம் இந்த 5 மாநில தேர்தல்களிலும் எதிரொலித்து இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஏனென்றால் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தான் ஆட்சிக்கு வந்துவிட்டால் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைப்பதாகவும், விலையும் குறைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது வரையில் அவரது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில், வாக்கு பதிவு முடிவுற்று வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்த பின்னர் ஒருசில தினங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு அறிவிப்பு வெளியானது. இதனால் பொது மக்கள் எல்லோரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.

இந்தநிலையில் பொதுத்துறை நிறுவனங்களாக இருந்துவரும் இந்தியன் ஆயில் பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. நோய் தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் இறுதி வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தாமல் இருந்து வந்தார்கள் இந்த நிறுவனங்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அதனை பொது மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மத்திய அரசு இதன் விலையை உயர்த்தாமல் இருந்ததற்கு காரணம் சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தல்கள் தான் என்று பரவலாக பேசப்படுகிறது.

இந்த நிலையில், ஜூன் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்திருக்கிறது. ஒரு லிட்டருக்கு பெட்ரோல் 0.23 காசுகள் அதிகரித்து 94 ரூபாய் 54 காசுக்கும், டீசல் ஒரு லிட்டருக்கு 27 பைசா அதிகரித்து 88 ரூபாய் 34 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.