தமிழகத்தில் 3 மாதங்களுக்குப் பிறகு நோய் தொற்றால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு!

0
272

தமிழ்நாட்டில் நேற்று 14,212 பேருக்கு நோய் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 257 ஆண்கள் மற்றும் 219 பெண்கள் என ஒட்டுமொத்தமாக 476 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டது.

அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 221 பெரும், செங்கல்பட்டில் 95 பேரும், கோயமுத்தூரில் 26 பேரும், இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் நேற்று 24 மாவட்டங்களில் நோய் தொற்று பாதிப்பு பதிவாகியிருக்கிறது. இவற்றுள் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் 22 பேரும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 69 பேரும், இந்த நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நேற்றைய நிலவரத்தினடிப்படையில் 1938 பேர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 984 பேரும், செங்கல்பட்டில் 375 பேரும், கோயம்புத்தூரில் 118 பேரும், சிகிச்சையில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், நேற்று மட்டும் இந்த நோய் தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட 219 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 169 பேர் இந்த நோய் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள்.

அதனடிப்படையில், தமிழ்நாட்டில் இதுவரையில் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் சுமார் 34,18,481 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் 3 மாதங்களுக்கு பிறகு முதல் நோய்தொற்று மரணம் உண்டாகியிருக்கிறது. தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் இந்த நோய்த்தொற்று காரணமாக, உயிரிழந்துள்ளார். இவருக்கு எந்தவிதமான இணை நோயும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இவர் காய்ச்சல் இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் பரிசோதனை செய்ததில் நோய்த் தொற்று பாதிப்பு உறுதியானது.

இந்தநிலையில், அந்தப் பெண் சிகிச்சை பெற்ற நிலையில் திடீரென்று உயிரிழந்துள்ளார். உயிரிழப்பு காண மருத்துவ காரணம் தொடர்பாக மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

Previous articleசெல்வமகள் சிறுசேமிப்பு திட்டத்தில் இணைந்திருக்கிறீர்களா? அப்படியென்றால் இது உங்களுக்கான தகவல்தான்!
Next articleஅந்த சம்பவத்திற்கும் காவல்துறைக்கும் எந்தவிதமான தொடர்புமில்லை! காவல்துறை கூடுதல் ஆணையர் வெளியிட்ட அதிரடி விளக்கம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here