அந்த சம்பவத்திற்கும் காவல்துறைக்கும் எந்தவிதமான தொடர்புமில்லை! காவல்துறை கூடுதல் ஆணையர் வெளியிட்ட அதிரடி விளக்கம்!

0
75

திருவள்ளூர் மாவட்டம் அலாமரி பகுதியைச் சார்ந்த ராஜசேகரை கடந்த 12ஆம் தேதி கொடுங்கையூர் காவல் துறையினர் குற்ற வழக்கு ஒன்றின் விசாரணைக்காக கொடுங்கையூர் காவல் நிலையம் அழைத்து வந்தார்கள்.

இந்த விசாரணையின் போது ராஜசேகர் திடீரென்று மரணமடைந்தார் உடல்நலக்குறைவு இருந்த ராஜசேகரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், இந்த விவகாரம் காரணமாக கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர், பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன் உள்ளிட்ட 5 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

உடல்நலக் குறைவு காரணமாக, ராஜசேகர் மரணமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர் அதனை மறுக்கும் விதமாக தன்னுடைய மகனை காவல்துறையினர் அடித்து கொன்று விட்டதாகவும், ராஜசேகருக்கு உடல்நலத்தில் எந்தவிதமான குறைபாடும் இல்லை என்றும் அவருடைய தாயார் உஷாராணி குற்றம்சாட்டியிருந்தார்.

அதோடு தன்னுடைய மகன் மரணம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து போதுமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தன்னுடைய மகனின் பிரேத பரிசோதனை அறிக்கையை பெற்றுத்தர வேண்டும்.என ராஜசேகர் குடும்பத்தினர் சார்பாக மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு மனு வழங்கப்பட்டது.

இதற்கு நடுவில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து ராஜசேகர் மரணம் வழக்கு குறித்து போதுமான விளக்கத்துடன் கூடிய அறிக்கையை 4 வார காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது.

இப்படியான நிலையில், விசாரணைக் கைதி இராஜசேகரன் மரணம் குறித்து முதல்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையை தற்சமயம் வெளியாகியிருக்கிறது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது ராஜசேகரின் பிரேத பரிசோதனையில் அவருடைய இடது தொடை கைகள் மற்றும் கால் முட்டி உள்ளிட்ட பகுதிகளில் ரத்தக்கட்டு இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

அதோடு ராஜசேகர் உடலில் மொத்தம் 4 வெளி காயங்கள் இருந்ததாகவும் காயங்கள் காரணமாகத்தான் மரணம் நிகழ்ந்ததாக உறுதியாக தெரிவிக்க முடியாது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதில் முதல் காயம் ராஜசேகரின் மரணத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்பும் 2மற்றும் 3வது காயங்கள் அவருடைய மரணத்திற்கு 18 மணி நேரத்திற்கு முன்பாகவும், 4வது காயம் 4 நாட்களுக்கு முன்பாகவும் ஏற்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புகைப்பழக்கமுல்ல எல்லோருக்கும் இது இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், இந்த வழக்கு குறித்து சென்னை காவல் வடக்கு கூடுதல் ஆணையர் அன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, ராஜசேகர் மரணம் குறித்து உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியாகி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் 4 காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த 4 காயங்களும் எப்போது ஏற்பட்டது என்றும் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

176-1(a) வழக்கு பதிவு செய்யப்பட்டு மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டதாகவும், காவல்துறையின் விசாரணையில் ராஜசேகருக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என்றும், தெரிவித்த அவர், எதன் காரணமாக, ராஜசேகர் உயிரிழந்தார் என்று கண்டறிவதற்காக மிஸ்ரா ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது என்றும், அதன் அறிக்கை வெளிவந்தவுடன் தான் மரணம் தொடர்பான முழுமையான விவரம் தெரியவரும் என்றும் கூறியிருக்கிறார்.

அதோடு உடலை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்து அவருடைய குடும்பத்தாரிடம் காவல்துறையினர் சென்றாலே பேரம் பேசுவதாக அவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

அதோடு காவல் துறையினர் ராஜசேகர் குடும்பத்தாரிடம் எந்தவிதமான பேரமும் பேசவில்லை. அது பொய் என்று தெரிவித்த அவர், ராஜசேகர் மரணத்திற்கும், காவல்துறைக்கும், எந்தவிதமான தொடர்பும் இல்லை என கூறியிருக்கிறார்.