1960 ஆம் ஆண்டு இதே போல் சென்னையில் வெள்ளம் வந்த பொழுது மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது தனது வீட்டிலேயே தனது மேற்பார்வையில் சமைத்து ஏழை மக்களின் பசியை ஆற்றிய சிவாஜி கணேசன்.
தமிழகத்தையே பெருவெள்ளம் ஆட்டிப் படைத்து வருகிறது. டிசம்பர் நான்காம் தேதி அன்று சென்னையை உலுக்கிய புயலை அடுத்து, இப்பொழுது கன்னியாகுமரி நெல்லை தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்கள் வளிமன்ற சுழற்சியால் மழை பெய்து ஏரிகள் உடைந்து இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்றளவும் வேளச்சேரி பகுதிகளில் தண்ணீர் குறையவில்லை. மக்கள் இயல்பு நிலைக்கு இன்னும் திரும்பாமல் தான் உள்ளனர். 2015 இதே போல் பெருவெள்ளம் சூழ்ந்த போது எத்தனையோ நடிகர் நடிகைகள் தங்களின் உதவி கரங்களை நீட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பொழுது தென் மாவட்டங்களில் மழை பெய்து வருவது கொஞ்சம் கொஞ்சமாக நின்றுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து தீவிரம் செய்யப்படுகின்றன
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதே போல் 1960 ஆம் ஆண்டு சென்னையில் பயங்கரமான வெள்ளம் வந்துள்ளது. அப்பொழுது ஏழை மக்கள் உணவிற்காக படாத பாடு பட்டிருக்கின்றனர். தனது மக்கள் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்று நினைத்த சிவாஜி கணேசன். அவரது வீட்டிலேயே பெரிய பெரிய பாத்திரங்களை வைத்து அவரது மேற்பார்வையில் அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் உணவளித்தார்.
மழை நின்ற பின்பும் கூட மக்கள் இயல்பு நிலைக்கு வரும் வரை தனது வீட்டிலேயே உணவை சமைத்து வழங்கினார். அப்படி அவர் உணவு தயாரிக்கும் புகைப்படம் ஒன்று கிடைத்துள்ளது.