ஒரு குழந்தைக்கு 100 மரம்… மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!

0
190

ஒவ்வொரு குழந்தைக்கு 100 மரங்கள் தர போவதாக சிக்கிம் அரசு முடிவு செய்துள்ளது.

மரங்கள் இயற்கையில் வரம் என கருதப்படுகிறது. மரங்கள் நீண்ட நாட்கள் வாழக்கூடியதாகவும் இயற்கைக்கு உதவுவதாகவும் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தங்கள் வாழ்நாளில் ஒரு மரம் நட வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாகவும் எண்ணமும் உள்ளது. ஒரு மரம் என்ன 100 மரங்கள் நடலாம் என சிக்கிம் அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, சிக்கிம் மாநிலத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 100 மரங்கன்றுகள் நட்டு அவற்றை பராமரிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மரம் நடுங்கள்,பாரம்பரியம் ஒன்றை விட்டுச் செல்லுங்கள் என்ற திட்டத்தை அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் தொடங்கினார். இது குறித்து அம்மாநில அதிகாரிகள் தெரிவிக்கையில், குழந்தைகள் பெற்றோர் மற்றும் இயற்கைக்கு இடையில் பிணைப்பு அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.

இத்திட்டத்தை தொடங்கி வைத்த அம்மாநில முதல்வர் தெரிவிக்கையில், குழந்தைகள் வளர வளர மரங்களும் வரும்,மரங்களை வளர்ப்பது பூமிக்கு ஒரு குழந்தையின் வருகையை வரவேற்பதற்கு சமமாகும்.இதுபோன்ற திட்டம் இந்தியாவிலேயே சிக்கிமில் தான் முதல் முறையாக கொண்டுவரப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த தொடக்கவிழாவில் புதிய பெற்றோர்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.

Previous article#கேரளா : வெளிநாட்டு பயணிக்கு பாலியல் தொல்லை.. காப்பாற்ற சென்றவருக்கும் அடி உதை..!
Next articleமது அருந்த, சிகிரெட் பிடிக்க கூறி டார்சர் செய்த சக மருத்துவர்.. பல் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு..!