1 முதல் 8 ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு! மீண்டும் ஆலோசிக்கும் கல்வித்துறை அமைச்சர்!

Photo of author

By Rupa

1 முதல் 8 ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு! மீண்டும் ஆலோசிக்கும் கல்வித்துறை அமைச்சர்!

கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில் தொற்று குறையும்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க பட்டது. அவ்வாறு முதலில் திறந்தபோது தடுப்பூசி ஏதும் நடைமுறைக்கு கொண்டு வரவில்லை. அதனால் அதிகப்படியான ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தொற்று பரவல் காணப்பட்டது. தற்பொழுது இரண்டாம் அலை கடந்த நிலையில் தடுப்பூசியானது  நடைமுறைக்கு வந்துள்ளது.மக்களும் விழிப்புணர்வுடன் தடுப்பூசியை எடுத்துக் கொள்கின்றனர்.அதனால் தமிழக அரசு அனைத்து துறைகளையும் பல கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதித்துள்ளது.அந்த வகையில் முதலில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து  பாடங்கள் பயின்று வருகின்றனர்.அதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்து பல கேள்விகள் எழுந்து வண்ணமாகவே  இருந்தது. கல்வித் துறை அமைச்சர் முதல்வருடன் ஆலோசனை நடத்திய பிறகு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறினார்.அவ்வாறு கூறியதையடுத்து  தீபாவளி பண்டிகை பள்ளி திறந்து  இரு தினங்களில் நடக்க இருப்பதால் பண்டிகை முடிந்த பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என்று பலரால் பேசப்பட்டு வந்தது.ஆனால் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நவம்பர் 1ஆம் தேதி உறுதியாக பள்ளிகள் திறக்கப்படும் என்று விளக்கம் அளித்தார்.

அவ்வாறு திறக்கப்படும் பள்ளிகள் எவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவேண்டும் ,எந்தவிதங்களில் முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும், எத்தனை சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பது குறித்து வரும் 12ஆம் தேதி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ,கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு  அனைத்து பள்ளிகளுக்கும் SOP யாரிக்கப்பட்டு வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர்.