2ம் பாகம் எடுத்து சொதப்பிய தமிழ்ப் படங்கள் : இவர்கள் மட்டும் விதிவிலக்கு!!
ஒரு படம் வெற்றி பெற்றால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், அந்த படத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் எடுக்கப்படும். முதல் பாகத்தின் கதையாக இரண்டாவது பாகம் இருக்கலாம் அல்லது வேறு, வேறு கதையாகவும் இருக்கலாம். முதல் படத்தின் தலைப்பு பிரம்மாண்ட வெற்றி பெற்றால் அதே தலைப்பில் வேறொரு கதையை வைத்து இரண்டாக படம் எடுத்து வெளியிடுவது தமிழ் சினிமாவின் தற்போதைய வழக்கமாக உள்ளது.
1982 ஆம் ஆண்டு இயக்குநரும், நடிகருமான விசு அவர்களின் இயக்கத்தில் எஸ்.வி.சேகர் அவர்களின் நடிப்பில் வெளியான படம் “மணல் கயிறு”. இந்த படம் வெற்றி பெற்றது. மக்களை மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த படத்தில் இரண்டாம் பாகம் 2016ம் ஆண்டு “மணல் கயிறு-” என்ற பெயரில் வெளியானது. இந்த படத்தை எஸ்.வி. சேகர் அவர்கள் இயக்கி இருந்தார். இப்படம் படுதோல்வியை சந்தித்தது.
2011ம் ஆண்டு மறைந்த இயக்குனர் கே.வி.ஆனந்த் அவர்களின் இயக்கத்தில் “கோ” படம் வெளியானது. இப்படம் மிகப் பிரமாண்ட வெற்றியை பெற்று தந்தது. அத்துடன் நடிகர் ஜீவா அவர்களின் திரையுலக பயணத்திற்கு இப்படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது. ஆனால் 2016 ஆம் ஆண்டு வெளியான “கோ-2” படம். வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை.
2006 ஆம் ஆண்டு மிஸ்கின் அவர்களின் இயக்கத்தில் நடிகர் நரேன், நடிகை பாவனா அவர்களின் கூட்டணியில் உருவான படம். “சித்திரம் பேசுதடி”. 2019ம் ஆண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது கூட யாருக்கும் தெரியவில்லை. இந்த படத்தின் இரண்டாம் பாகம் படுதோல்வி சந்தித்தது. சித்திரம் பேசுதடி முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
2015 ஆம் ஆண்டு வெளியான படம் “மாரி”. நடிகர் தனுஷ் அவர்களின் உருவான இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருந்தார். இப்பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இருப்பினும் படம் ஓரளவு மட்டும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. படத்தின் இரண்டாம் பாகம் அதே கூட்டணியில், அதே கதை அம்சத்தில் உருவாக்கப்பட்டது. இருப்பினும் இரண்டாம் பாகம் சரியாக மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை. வணிக ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது.
குரோதம் 1982 ஆம் ஆண்டு பிரேம் மேனன் கதை, திரைக்கதையில், ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில், கே. ரங்கராஜன் வசனத்தில், சங்கர் கணேஷ் இசையில் வெளியான தமிழ் திரைப்படம். பிரேம் மேனன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், அதிக வசூலை தந்தது. 2000 ஆவது ஆண்டு பிரேம் மேனன் நடித்து இயக்கிய இப்படத்தின் இரண்டாம் பாகமான குரோதம் 2 வெளியானது. இருப்பினும் மக்கள் மத்தியில் முதல் பாகத்தைப் போல “குரோதம்-2” படம் நல்ல வரவேற்பைப் பெறவில்லை.
இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே தான் செல்கிறது. இருப்பினும் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் தமிழ் சினிமா இயக்குனர்கள் குறியாக உள்ளனர். ஆனால் ஒரு படத்தை எடுத்து, ஹிட் படமாக்கி, அதன் தொடர்சியாக அடுத்தடுத்த பாகங்களை எடுத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுவதுடன், வசூல் ரீதியாக பிரம்மாண்ட வெற்றியையும் தொடர்ந்து கொடுத்து வருபவர்கள் தமிழ் சினிமாவில் இயக்குனர் சுந்தர்.சி மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் அவர்கள் தான்.