2 ரன்களில் முதல் சதத்தை தவறவிட்ட இங்கிலாந்து வீரர்!! 

0
83
England player misses first century by 2 runs!!
England player misses first century by 2 runs!!

2 ரன்களில் முதல் சதத்தை தவறவிட்ட இங்கிலாந்து வீரர்!!

 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி வீரர் பென் டக்கெட் தனது முதல் ஆஷஸ் சதத்தை இரண்டு ரன்களில் தவறவிட்டுள்ளார்.

 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது.

 

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் சதம் அடித்து 110 ரன்கள் சேர்த்தார். டேவிட் வார்னர் அரைசதம் அடித்து 66 ரன்களும் டிராவியாஸ் ஹெட் அரைசதம் அடித்து 77 ரன்களும் லபச்சானே 47 ரன்களும் சேர்த்தனர்.இங்கிலாந்து அணியில் பந்துவீச்சில்  ராபின்சன், ஜோஸ் தங் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும், ஜோ ரூட் 2 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன், பிராட் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை இங்கிலாந்து அணி தொடங்கியது. இங்கிலாந்து அணியில் சிறப்பாக விளையாடிய பென் டக்கெட் அரைசதம் அடித்து 98 ரன்களில் ஆட்டமிழந்தார்.98 ரன்களில் ஆட்டமிழந்த பென் டக்கெட் 2 ரன்களில் தனது முதல் ஆஷஸ் தொடர் சதத்தை தவறவிட்டுள்ளார்.ஜேக் கிராவ்லி 48 ரன்களுக்கும், ஒலியி போப் 45 ரன்களுக்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 10 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

 

ஹேரி பிரூக் 45 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில்உள்ளனர். இதனால் இங்கிலாந்து அணி இரண்டாவது ஆட்டநாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்துள்ளது.மேலும் இங்கிலாந்து அணி 138 ரன்கள் பின் தங்கியுள்ளது. பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க், லயன், கிரீன், ஹசல்வுட்  நால்வரும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.