மஞ்சள் காமலை வந்தவன் மாதிரி இருக்கான்!! மஞ்சள் வீரன் பற்றி பதிவிட்ட புளூ சட்டை!!

0
64
He looks like a jaundiced man!! The blue shirt posted about the yellow hero!!
He looks like a jaundiced man!! The blue shirt posted about the yellow hero!!

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் நடிக்கும் முதல் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானதை அடுத்து பிரபல சினிமா ரிவியூவர் புளூ சட்டை மாறன் அவர்கள் பர்ஸ்ட்லுக் போஸ்டரை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் அவர்கள் தனது பைக் சாகசங்கள் மூலமாகவும் பைக் ரைடிங் மூலமாகவும் யூடியூபில் பிரபலமானவர்.இவருக்கு என்று தனியாக ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர் செல்லும் இடம் எல்லாம் ரசிகர்கள் கடல் போல கூடிவிடுவார்கள். 

டிடிஎப் வாசன் அவர்கள் அடிக்கடி வழக்குகளில் மாட்டுவதும் பல சிக்கல்களை எதிர்கொள்வதும் வழக்கமான செயலாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் யூடியூபர் டிடிஎப் வாசன் திரைப்படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் பரவியது. அந்த தகவல் தற்போது உறுதியாகி உள்ளது. 

நேற்று(ஜூன்29) டிடிஎப் வாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் திரைப்படத்தின் முதல் பார்வை அதாவது பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. டிடிஎப் வாசன் நடிக்கும் முதல் படத்திற்கு மஞ்சள் வீரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. டிடிஎப் வாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்த படத்தை இயக்குநர் செல்வம் இயக்குகிறார். கதாநாயகி யார் என்று தெரியவில்லை. 

இது தொடர்பாக டிடிஎப் வாசன் அவர்கள் வெளியிட்ட வீடியோவில் இன்னும் மஞ்சள் வீரன் திரைப்படத்தை பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகள் வரவுள்ளது. கதாநாயகி யார், வில்லன் யார், காமெடியன் யார் என்பது குறித்து  அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் பிரபல சினிமா ரிவியூவர் புளூ சட்டை மாறன் அவர்கள் மஞ்சள் வீரன் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை பகிர்த்துள்ளார். 

சினிமா ரிவியூவர் புளூசட்டை மாறன் மஞ்சள் வீரன் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை பகிர்ந்து போஸ்டர் பற்றி கமெண்ட் செய்துள்ளார். அவர் பதிவிட்ட கமெண்டில் “மஞ்சகாமாலை வந்தவன் மாதிரி இருக்கான். இவன் மஞ்சள் வீரனா. இதையெல்லாம் பாக்கனும்னு எங்க தலையெலுத்து” என்று பதிவிட்டுள்ளார். மேலும் பலர் அந்த போஸ்ட்டின் கீழ் தங்களது கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.