எரிமலை சாம்பலால் மூடப்பட்ட நகரில் 2000 ஆண்டுகள் பழமையான தேர்..!

Photo of author

By CineDesk

எரிமலை சாம்பலால் மூடப்பட்ட நகரில் 2000 ஆண்டுகள் பழமையான தேர்..!

CineDesk

Updated on:

சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேர் ஒன்று இத்தாலியில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெற்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஒன்று தான் இத்தாலி. இத்தாலியின் தென் பகுதியில் உள்ள தொன்மையான நகரம் பாம்பேய். இந்த நகரத்தை அடையாளம் காட்டுவது எரிமலை சீற்றம் தான். கி.பி.79ல் வெசுவியஸ் மலையில் எரிமலை சீற்றம் ஏற்பட்டதில் பாம்பேய் நகரம் முழுவதிலும் அதன் சாம்பல் படிந்தது. எரிமலையின் அடர்த்தியான சாம்பலால் மூடப்பட்ட பாம்பேய் நகரம் அழிந்ததாகவும் வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.

அழிந்த பாம்பேய் நகரில் வாழ்ந்த மனிதர்களின் எச்சங்கள் மற்றும் கட்டிடங்கள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கு வாழ்ந்தவர்களின் நகரீகம் மற்றும் மக்களின் வாழ்க்கை முறையை அகழ்வாய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் தான் பாம்பேய் நகரம் அகழ்வாய்வாளர்களின் சொர்க்க பூமியாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாம்பேய் நகரில் சுமார் 2,000 ஆண்டுகள் முன்னதாக பயன்படுத்தப்பட்ட தேர் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

4 சக்கரங்களுடன் காணப்படும் தேர், பழங்காலத்தில் குதிரைகள் கட்டிப்போட பயன்படுத்திய லாயத்தின் அருகில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பாம்பேய் நகரின் வடக்கு பகுதியில் உள்ள சிவிட்டா கைலியனா எனும் பழங்கால மாளிகையின் முற்றத்திலும் தேர் இருந்துள்ளதாக தொல்லியல் ஆய்வு கூறுகின்றன.

சிதையாமல் இருக்கும் தேரில் இரும்புக்கூறுகள், பித்தளை மற்றும் உலோகத்திலான வேலைபாடுகள், கயிறு மற்றும் மலர் அலங்காரங்கள் இடம்பெற்றுள்ளன. பார்ப்பதற்கு கலைநயத்துடன் காணப்படும் தேர் அக்காலத்தில் திருவிழா மற்றும் அணி வகுப்புகளுக்கு பயன்படுத்தி இருக்க கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.