பிரியாவின் இழப்பிற்கு 2 கோடி நிவாரணம்.. அடுத்தடுத்து 2 பெரிய காரியங்கள் செய்யும் பாஜக – சீக்ரெட்டை உடைத்த அண்ணாமலை!
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா உயிரிழந்தது தமிழகத்தையே உலுக்கியது. அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததால் இவருக்கு இழப்பீடாக தமிழக அரசு 10 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கியது. இதனை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் பிரியாவின் இல்லத்திற்கு சென்று இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் இன்று முதல்வர் ஸ்டாலின் பிரியாவின் வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவித்தார். அதை எடுத்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் சென்று அவர்களின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்பு அங்கிருந்த நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அதில், சகோதரி பிரியா உயிரிழந்தது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. விளையாட்டில் முன்னேறி செல்ல வேண்டும் என்ற கனவை கொண்ட பிரியா தவறான சிகிச்சையால் அவருடைய காலை இழக்க நேரிட்டது.
இதற்கு காரணம் சரியான முறையில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காது தான். இந்தியாவில் மருத்துவம் ஆனது மக்களுக்காக மிகவும் சிறப்பு வாய்ந்த முறையில் அனைத்து இடங்களிலும் செயல்பட வேண்டும். அந்த வகையில் மருத்துவத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டின் இவ்வாறு ஒரு சம்பவம் அரங்கேரி இருப்பது வருத்தத்திற்குரியதாக உள்ளது. முதல்வர் இருக்கும் இந்த தொகுதியில் கூடுதல் கட்டுப்பாடுகளாக இருந்திருக்க வேண்டும் அவ்வாறு இல்லாமல் இருப்பது கடுமையாக கண்டிக்க வேண்டியது.
இது குறித்து உரித்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு கூறினாலும் பல இடங்களில் நிலை மாறாமல் அப்படியேதான் உள்ளது. பிரியாவின் இறப்பு மட்டுமே ஊடகங்கள் வாயிலாக வெளியே வந்துள்ளது. இதுபோல பல இழப்புகள் தற்பொழுது வரை தெரியப்படாமலே மறைத்துள்ளனர். தமிழகம் குறித்து மருத்துவத்துறையில் ஒரு தனி பெயர் உள்ளது. இதனை மீட்டுக் கொண்டு வர தான் பிரியாவின் இழப்பீடானது இரண்டு கோடி வழங்குமாறு வலியுறுத்தியுள்ளோம்.
மேலும் பிரியாவின் தந்தை பிரியாவின் கனவுகளை பற்றி என்னிடம் கூறினார். அதில் பிரியா, பல்வேறு பதக்கங்களை பெற்று அதனை பிரதமர் மோடி க்கு எடுத்து சென்று காட்ட வேண்டும் என்ற ஒரு ஆசை இருந்ததாக கூறியுள்ளார். இதனை நிறைவேற்ற முடியாத தந்தையாக தற்பொழுது நிற்பதாகவும் தெரிவித்துள்ளார். அந்த வகையில் இன்னும் ஐந்து நாட்களில் முக்கிய இரண்டு செயல்களை பாஜக செய்வதாக உறுதி கூறியுள்ளோம்.
பிரியாவின் பெயர் நீங்காமல் நிலைத்து நிற்க வேண்டும் என்பதால், பருவமழை முடிந்தவுடன் பிரியாவின் பெயரில் ஒரு கால்பந்து போட்டி நடத்தப் போவதாக தெரிவித்தார். இதற்கு தலைமை தாங்குவதற்காக மத்திய விளையாட்டு துறை அமைச்சரை அழைத்து வருவதாகவும் கூறியுள்ளார். உயிரிழந்த பிரியாவின் சகோதரர்கள் பட்டியலிடும் 10 கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு பாஜக சார்பில் உதவித்தொகை வழங்கப்படும்.
அத்தோடு அவர்கள் விரும்பும் அகாடமியில் சேர்க்கப்படும். அதற்கான அனைத்து செலவினங்களையும் பாஜகவை ஏற்கும் என கூறினார். அதேபோல இறுதியில் ஓர் பிரியாவை நாம் இழந்து விட்டோம் ஆண்டுதோறும் இனி 10 பிரியாக்களை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.