இரண்டாம் தேதி தமிழகத்தில் முழு ஊரடங்கு? விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!

Photo of author

By Sakthi

நாளை மறுதினம் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அதன் காரணமாக, இரண்டு தினங்கள் முழு ஊரடங்கு மற்றும் பல கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் இன்றோ அல்லது நாளையோ தமிழக அரசு சார்பாக வெளியிடப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழகம் முழுவதிலும் இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. இதை தவிர கடந்த 26ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்திருக்கின்றன.

கோயில்கள், தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், முடி திருத்தும் கடைகள், அழகு நிலையங்கள், கேளிக்கை விடுதிகள், போன்றவைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சென்ற ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது காரணமாக, தினசரி நோய் தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சற்று குறைந்ததாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெற இருக்கின்றது நோய்த்தொற்று காரணமாக, அரசியல் கட்சிகளின் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது. ஓட்டு எண்ணிக்கை காரணமாக, மே மாதம் ஒன்று மற்றும் இரண்டாம் தேதிகளில் முழு ஊரடங்கு அமல் படுத்துவது தொடர்பாக பரிசீலனை செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது.

அதனை ஏற்ற தமிழக அரசு இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு அமல் படுத்துவது அதோடு பல கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இன்று காலை முதல் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

அத்துடன் இந்த ஆலோசனைக்கு பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு அதோடு பல கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பு போன்றவை அரசு சார்பாக வெளியாகக் கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.