+2 மாணவர்களுக்கு மீண்டும் வெளியான தேர்வு முடிவுகள்!! உடனே சரி பாருங்கள்!! 

Photo of author

By Preethi

+2 மாணவர்களுக்கு மீண்டும் வெளியான தேர்வு முடிவுகள்!! உடனே சரி பாருங்கள்!!

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் +2 பொதுத்தேர்வுகள்   நடைபெற்று முடிவடைந்தது. அதற்கு அடுத்து கடந்த மே மாதம் 8 ஆம் தேதி +2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்தது. அந்த முடிவுகளில்  அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி என்ற முடிவு வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சில மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களில் தவறுகள் இருப்பதாக கூறி மறு மதீப்பிடு செய்ய விண்ணப்பித்து இருந்தார்கள். தற்போது மறுகூட்டல் மற்றும் மறு மதீப்பிடு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகும் என இணையத்தில் செய்தி வேகமாக பரவிவருகிறது.

இதுகுறித்து  அரசு தேர்வுகள்  இயக்கம் இதனை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்ய www.dge.tn.gov.in என்ற இணையதளத்தை வெளியிட்டுள்ளது. மேலும் மறுகூட்டல் மற்றும் மறு மதீப்பிடு விண்ணபித்த மாணவர்கள் அனைவரும் இன்று பிற்பகல்  மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களின் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

இந்த   www.dge.tn.gov.in இணையதளத்திற்கு சென்று பிறந்தத்தேதி மற்றும் பதிவு எண்கள்  ஆகிய விவரங்களை  பதிவிட்டால் புதிய முடிவுகள் வெளிவரும். இதில் புதிய மதிப்பெண் கொண்ட முடிவுகளின்  மதிப்பெண் பட்டியல் வெளிவரும் என்று அறிவித்துள்ளனர். இது மட்டுமின்றி இப்பட்டியலில் இருக்கும் மதிப்பெண்களை இன்று பதிவிறக்கம் செய்யலாம் என அறிவித்துள்ளது. மேலும் மறுகூட்டல் மற்றும் மறு மதீப்பிடு செய்தவர்களின் முடிவுகள் மட்டும் இணையத்தில் இன்று வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.