கவினுக்கு ஜோடியாக 2 கதாநாயகிகள் ஒப்பந்தம்!!

0
128
#image_title

கவினுக்கு ஜோடியாக 2 கதாநாயகிகள் ஒப்பந்தம்!!

ஸ்டார் திரைப்படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடிக்க இரண்டு கதாநாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியின் முன்னணி சீரியலான சரவணன்- மீனாட்சி என்னும் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின்.

அதன்பிறகு, பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகர் கவின் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, சத்ரியன், நட்புன்னா என்னான்னு தெரியுமா ( 2019) ஆகிய படங்களில் நடித்தார். பின்னர் கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஓடிடி தளத்தில் வெளியான லிப்ட் படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்தாண்டு வெளியான டாடா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் விருப்ப நாயகனாக கவின் ரஉருவெடுத்தார்.

டாடா திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற் றதை தொடர்ந்து, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர தொடங்கின. அதன்படி, பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளன் இயக்கத் தில் கவின் ஒப்பந்தமாகினார். இந்த படத்திற்கு ஸ்டார் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ள நிலையில், தற்போது படத்தில் கவினுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆதிதி பொஹங்கர், பிரித்தி முகுந்தன் ஆகிய இருவர் இப்படத்தில் நாயகிகளாக நடிக்கின்றனர். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் தேவை என்பதால் இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குநரான இளம் கூறினார்.

நல்ல கதை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் கவின் முன்னணி நட்சத்திரங்களின் அந்தஸ்துக்கு உயரலாம் என்று கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Previous articleபுகைப் பழக்தத்தை மறக்க முடியவில்லையா!!! இதை மறக்கச் செய்ய இதோ சில எளிமையான வழிமுறைகள்!!!
Next articleபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை!! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!