ஓய்வூதியத்தை நிறுத்தியதால் வங்கிக்கு 2 லட்சம் அபராதம்!! எச்சரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம்!
பல வங்கிகளும் ஓய்வூதியதாரர்கள் வாங்கிய கடன் தீர்க்க அல்லது இதர காரணங்களுக்காக ஓய்வூதியத்தை கொடுக்காமல் நிறுத்தி வைத்து விடுகின்றனர். இதனால் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகுகின்றனர். இதுகுறித்து திருவாரூர் விஜயபுரம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், நான் என் நண்பர் வாங்கிய கடனுக்காக ஜாமீன் கையெழுத்து போட்டேன்.என் நண்பர் தற்பொழுது அப்பணத்தை கட்டாமல் உள்ளார். அதனால் தனது ஓய்வூதியத்தை அந்த வங்கி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. உங்களது நண்பர் எப்பொழுது பணத்தை கட்டுகிறாரோ அப்போதுதான் உங்கள் ஓய்வூதியம் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறுகின்றனர்.
இதனால் நான் ஓய்வூதியத்தை பெற முடியாமல் சிரமப்படுகிறேன் இவ்வாறு அவர் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் அந்த வங்கியின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.அந்த வகையில் ஓய்வூதியம் தராமல் நிறுத்தம் செய்யப்பட்டுள்ள வங்கிக்கு இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. எந்த ஒரு காரணங்களுக்காகவும் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்க கூடாது என்று எச்சரித்துள்ளது.