மத்திய அரசுக்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதாவது CISF-இல் காலியாக உள்ள Head Constable பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
இந்த பணிகளுக்கு என்று மொத்தம் 403 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் ஜூன் 06 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை வகை: மத்திய அரசு வேலை
நிறுவனம்: மத்திய தொழில் பாதுகாப்பு படை(CISF)
Central Industrial Security Force
வேலை: Head Constable
காலிப்பணியிடங்கள்: Head Constable பணிக்கென்று மொத்தம் 403 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
Head Constable பணிக்கு விண்ணப்பம் செய்ய அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத ஊதியம்:
Head Constable பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25,000/- முதல் ரூ.81,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
Head Constable பணிக்கு விண்ணப்பிக்க இருப்பவர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 18 என்றும் அதிகபட்ச வயது வரம்பு 23 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
விண்ணப்பக்கட்டணம்:
பொது பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.100/-
இதர வகுப்பினருக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்து தேர்வு
சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
Head Constable பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் http://cisfrectt.cisf.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 06/06/2025