ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட நபர்கள்:! தர்மபுரி அருகே பரபரப்பு!

Photo of author

By Pavithra

ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட நபர்கள்:! தர்மபுரி அருகே பரபரப்பு!

Pavithra

Updated on:

ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட நபர்கள்:! தர்மபுரி அருகே பரபரப்பு!

தர்மபுரி அருகே ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து இரவுநேரங்களில் வியாபாரிகளிடம்,புழக்கத்தில் விட்ட இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் தாளநத்தம் பகுதியில்,இரண்டு இளைஞர்கள்,அவர்கள் சொந்தமாக வைத்திருக்கும் ஜெராக்ஸ் மிஷினை நூறு ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து,சற்று வயது முதிர்ந்த வியாபாரிகளிடம்,கொடுத்த பொருட்களை வாங்கி வந்துள்ளனர்.இதுபோன்று ஒரு வியாபாரியிடம் 100 ரூபாய் கலர் ஜெராக்ஸ் நோட்டை கொடுத்துவிட்டு அந்த இரண்டு இளைஞர்களும் பொருட்களை வாங்கிருக்கின்றனர்.ரூபாய் நோட்டுக்களை எண்ணும் பொழுது அது கலர் ஜெராக்ஸ் என்று சுதாரித்துக்கொண்ட வியாபாரி,மற்றும் அக்கம் பக்கத்தினர் அந்த இளைஞர்களை பிடிக்க முயன்றுள்ளனர்.ஆனால் அவர்கள் தப்பிச் சென்றதால்,காவல் நிலையத்தில் வியாபாரிகள் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்த காவல்துறையினர்,இந்த கள்ள நோட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஊத்தங்கரை தோரணம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் ராஜ்குமார் என்பது தெரியவந்தது.உடனடியாக இரண்டு நபர்களையும் கைது செய்த காவல்துறையினர்,அவர்களிடமிருந்த ஜெராக்ஸ் மெஷின் மற்றும் கள்ளநோட்டை உடனடியாக பறிமுதல் செய்தனர்.மேலும் இது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.