கொசுக்கள் மூலம் பரவும் புதிய வைரஸுக்கு 2 பேர் பலி!! அதிர்ச்சியில் உலக நாடுகள்!!

Photo of author

By Divya

கொசுக்கள் மூலம் பரவும் புதிய வைரஸுக்கு 2 பேர் பலி!! அதிர்ச்சியில் உலக நாடுகள்!!

நவீன உலகில் தினந்தோறும் புதிய வைரஸ்கள் உருவாகி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மனித உயிர்களை தனக்கு இறையாக்கியது.சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் உச்சத்தில் இருந்து மக்களை பாடாய் படுத்தி எடுத்தது.

தற்பொழுது கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்திருக்கும் நிலையில் தற்பொழுது புதுப் புதுப் பெயர்களில் வைரஸ்,காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டு மருத்துவ மனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பிய வண்ணம் உள்ளது.சுகாதாரமற்ற நீர்,மாசடைந்த காற்று உள்ளிட்ட சுகாதார சீர்கேடுகளால் பல்வேறு நோய் பாதிப்புகள் எளிதில் மனிதர்களை தொற்றுகிறது.

இந்நிலையில் பிரேசில் நாட்டில் ஓரோபவுச் என்ற புதிய வகை வைரஸ் தொற்றுக்கு 2 பேர் உயிரிழந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.இந்த வைரஸ் தொற்றால் ஏற்படும் பாதிப்புகள் டெங்கு வைரஸின் அறிகுறிகளை ஒத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த ஓரோபவுச் வைரஸ் கொசுக்கள் மூலம் பரவக் கூடியவை.ஆனால் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது என்பது சற்று நிம்மதியளிக்கும் விதமாக உள்ளது.ஒருவேளை கர்ப்பிணி பெண்கள் இந்த வைரஸ் பாதிப்பை சந்தித்தால் அவர்கள் வயிற்றில் வளரக் கூடிய குழந்தைக்கு வைரஸ் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.

ஓரோபவுச் வைரஸ் தொற்று அறிகுறிகள்:

1)கடுமையான காய்ச்சல்
2)தசைவலி
3)மூட்டு வலி
4)தலைவலி
5)வாந்தி
6)குமட்டல்
7)குளிர்
8)ஒளி உணர்திறன்

இந்த வைரஸ் பாதிப்பு தீவிரமானால் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

ஓரோபவுச் வைரஸ் தொற்றை தடுக்கும் வழிமுறைகள்:

*வெளியில் சென்று விட்டு வந்தால் கை,கால்களை நன்கு கழுவ வேண்டும்.

*தங்கள் வீட்டை சுற்றிலும் கொசுக்கள் உற்பத்தி ஆகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

*வீட்டு ஜன்னல்கள் வழியாக கொசுக்கள் பரவாமல் இருக்க வலைகள் கட்டவும்.

*வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.