சின்னசேலம் அருகே மது பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது!!

Photo of author

By Savitha

சின்னசேலம் அருகே மது பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கீழ்குப்பம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, வி.கிருஷ்ணப்புரம் டாஸ்மாக் கடை அருகே வைத்து, மதுபாட்டில்கள் விற்ற தியாகதுருகத்தை சேர்ந்த விஜய் (வயது 40) என்பவரை கைது செய்து, 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல கூகையூர் அரசு மதுபான கடை அருகே மதுபாட்டில்கள் விற்ற, வீரபயங்கரத்தை சேர்ந்த குமரப்பிள்ளை (வயது 58) என்பவரையும் போலீசார் கைது செய்து, 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.