தமிழகத்தில் நாளை வெளியாகிறது +2 ரிசல்ட்!! ஆர்வத்துடன் இருக்கும் மாணவ மாணவிகள்!!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் நாளை வெளியாகிறது +2 ரிசல்ட்!! ஆர்வத்துடன் இருக்கும் மாணவ மாணவிகள்!!

தமிழகத்தில் நாளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது. தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியது. மார்ச் 13ம் தேதி தொடங்கிய பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை 8.17 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர்.

ஏற்கனவே பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவகள் மே 8ம் தேதி வெளியிடப்படும் என்று அரசு அறிவித்தது. அறிவத்தபடியே நாளை அதாவது மே 8ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது.

நாளை மே 8ம் தேதி காலை 9.39 மணிக்கு பிளஸ் டு தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் அனைவரும் தேர்வு முடிகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in என்ற இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.