நோய்தொற்று ஊரடங்கு! இன்று முதல் புதிய கட்டுப்பாடு அமல்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் இன்றைய தினம் கோவை, நீலகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது.

அதேபோல நாளையதினம் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கள்ளக்குறிச்சி ,அரியலூர், பெரம்பலூர், கடலூர் திருவண்ணாமலை, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்கள் நீட்டிக்க பட்டு இருக்கிறது என்று தமிழக அரசு ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இன்று முதல் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி வரையில் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிக அளவில் பொதுமக்கள் ஒன்று கூடுவதால் ஒரே சமயத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து விதமான மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாட்டுடன் வரும் 23ஆம் தேதி காலை 6 மணி வரையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

சென்ற வாரத்தில் கூட்டம் அதிகமாக ஒன்று சேரக்கூடிய பகுதிகளில் அது போன்ற நிகழ்வுகள் மற்றும் சந்தை இடங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள், காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் நோய் பரவல் கட்டுக்குள் இருந்து வருகிறது என்று தெரிகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட மாநிலம் தழுவிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொது மக்களிடையே நோய் தோற்று குறித்த விழிப்புணர்வை அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் பொது மக்கள் கூடுவதை தவிர்க்கும் விதமாக திறந்தவெளியில் தனித்தனியாக பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அனுமதிக்கப்பட்ட மேற்கண்ட அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேரக்கூடிய பகுதிகளில் கீழ்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கடைகளின் நுழைவாயிலில் வாடிக்கையாளர் பயன்படுத்தும் விதத்தில் சுத்தம் செய்யும் கிருமிநாசினிகள் கட்டாயமாக வைப்பதுடன் உடல் வெப்ப பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கடைகளில் பணியாற்றுபவர்கள், வாடிக்கையாளர்களும், கட்டாயமாக முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு அனைத்து விதமான கடைகளும் காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதுடன் கடைகளில் சமூக இடைவெளியை கட்டாயமாகக் கடைப்பிடிக்கும் விதத்தில் ஒரே சமயத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.