திருப்பத்தூர் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றி திரிந்த 2 காட்டு யானைகள்!! மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக குடியிருப்புப் பகுதிகளில் சுற்றி திரிந்து வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த 2 காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி 8 மணி நேரம் போராடி வாகனத்தில் ஏற்றிய வனதுறையினர்.
திருப்பத்தூர் மாவட்டம் தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியான நாட்றம்பள்ளி அடுத்த தகரகுப்பம் மலைப்பகுதியில் கடந்த 13 ஆம் தேதி முகமிட்டிருந்த இரண்டு காட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டி அடிக்கும் வனத்துறையினர், மற்றும் காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் தகரகுப்பம் பகுதியில் இருந்து 14 ஆம் தேதி ஆத்தூர்குப்பம் தேசிய நெடுஞ்சாலையை கடந்து அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் முகாமிட்டன. அதனை மாவட்ட நிர்வாகம் சார்பில் யானையை விரட்ட வேலூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஆம்பூர், உள்ளிட்ட பகுதியிலிருந்து வனத்துறையினர் வரவழைக்கப்பட்டு வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க முயன்றனர்.
இருந்த போதிலும் பொதுமக்களுடைய ஒத்துழைப்பு இல்லாததால் அதனை வனப் பகுதிக்குள் விரட்டுவதில் மிகுந்த சிக்கல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 16-ஆம் தேதி ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் இரண்டு யானைகளும் தஞ்சம் அடைந்தது. இதனையடுத்து ஏலகிரி மலைகளில் இருந்து நேற்று முன்தினம் வெளியேறிய அந்த இரண்டு காட்டு யானைகள் பாச்சல் அடுத்த அண்ணாண்டப்பட்டி ஏரியில் முகாமிட்டு ஆனந்த குளியல் போட்டு இருந்தது.
இதனை ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வந்த வனத்துறையினர் அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்டியடிக்க கடந்த 5 நாட்களாக போராடி வந்தனர். அது வனபகுதியில் செல்லாமல் நேற்று இரவோடு இரவாக அங்கிருந்து வெங்களாபுரம் வழியாக திப்பசமுத்திரம் பகுதியில் ஏரியில் இரண்டு யானைகளும் தஞ்சம் அடைந்தது.
இந்த யானைகளை பிடிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பொள்ளாச்சி ஆணமலையிலிருந்து சின்னதம்பி மற்றும் முதுமலையிலிருந்து உதயன், வில்சன் ஆகிய மூன்று கும்கி யானைகளை நேற்று காலை வரவைக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து அந்த இரண்டு காட்டு ஆண் யானைகளை பிடிக்க நேற்று மாலை 5 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் நாகா சதீஷ் கிடிஜவாலா, வேலூர் மண்டல வன பாதுகாப்பாளர் சுஜாதா அடங்கிய 100-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அந்தப் பகுதியில் முகாமிட்டனர்.
பின்னர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முதுமலை மதுரை மற்றும் ஓசூர் ஆகிய பகுதியிலிருந்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டன அதில் கலைவாணன், பிரகாஷ், ராஜோஷ், விஜயராகவன் ஆகிய நான்கு குழுக்களாக பிரிந்து ஏரியில் இருக்கக்கூடிய அந்த இரண்டு காட்டு ஆண் யானைகளை தொடர்ந்து கண்காணித்தனர்.
ஆப்போது ஏரியில் முதலில் ஒரு யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மற்றொரு யானையான சிறுது நேரத்தில் ஒரு மருத்துவ குழு மயக்க மருந்து செலுத்தினர். ஆக்ரோஷமாக இருந்த யானைகள் இங்கும் அங்கும் ஓட தொடங்கியது. அதன் பின்னர் ஏரியில் ஒரு பகுதியில் மயக்கமான நிலையில் நின்றது அதனை தொடர்ந்து கயிறுகள் மூலமாக கால்களை இருக்கி கட்டுப்பட்டன.
பின்னர் சம்பவத்தில் சின்னத்தம்பி, உதயம் மற்றும் வில்சன் ஆகிய 3 கும்கி யானைகளை வரவழைக்கப்பட்டு பின்னர் அதனை வாகனத்தில் ஏற்ற முயற்சி செய்தனர். இருந்த போதிலும் அந்த யானைகள் அதிக மயக்கம் இருந்ததால் அதை ஏற்ற முடியாமல் வனத்துறையினர்.. அதற்கு மருத்துவம் அடங்கிய குளுக்கோஸ் போடப்பட்டது.
பின்னர் ஜேசிபி எந்திரம் மூலமாகவும் கும்கியானை மூலமாகவும் 8 மணி நேரத்துக்கு மேலாக போராடி ஒன்றன் பின் ஒன்றாக அந்த அட்டகாசம் செய்து வந்த இரண்டு காட்டு ஆண் யானைகளை வாகனத்தில் ஏற்றினர். பின்னர் லாரியில் ஏற்றி சென்ற இரண்டு யானைகளும் கிருஷ்ணகிரி ஓசூர் இடைப்பட்ட பகுதிகளில் அடர்ந்த வனப் பகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் யானைகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்லும்வரை சம்பவ இடத்திலேயே மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.