படித்து முடிக்கும் போதே 20% சதவீதம் இட ஒதுக்கீடு பயிற்று மொழி சான்றிதழ்கள்!! பள்ளிகல்வித்துறை அதிரடி உத்தரவு!!
அனைத்து மாநில அரசுகளும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள், புத்தகம், நோட்டு போன்ற பல திட்டங்களை செயல்படுத்திவருகிறது.
மற்ற மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது.இந்த நிலையில் தமிழக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. மேலும் அவர்களின் எதிர் காலத்திற்கும் பல வசதிகளை ஏற்படுத்தி தருகிறது. தற்போது எல்லாம் தமிழ் மொழியில் கல்வி பயலும் மாணவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ் மொழியில் பயலும் மாணவர்களுக்கு அரசு துறையில் வேலைவாய்ப்பு பெற 20% சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மேற்படிப்பிற்கு சேரும் போதும் மருத்துவம் மற்றும் பொறியியல் கலந்தாய்வுகளில் தமிழ் வழி பயன்ற மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சிறப்பு ஒதுக்கீடு பெறுவதற்கு எந்தந்த வகுப்புகளில் தமிழ் வழி பயிற்று மொழி சான்றிழ்தகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சான்றிதலழ்களுக்கு தனியாக விண்ணப்பித்து பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. தற்போது மாணவர்கள் அதற்கு தனியாக அலையாமல் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும் அதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மாணவர்கள் படித்து முடிக்கும் பொது அவர்களுக்கு பயிற்று மொழி சான்றிதழ்களை பெற்று கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.