20 வயது இளம்பெண்… ஒரே பிரசவத்தில் 2 ஆண் 2 பெண் குழந்தைகள்..!! போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்!

0
124

தமிழகத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 2 ஆண் 2 பெண் குழந்தைகள் பிறந்தநாள் சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ் (வயது 26) – இசக்கியம்மாள் (வயது 20) தம்பதியினர். இசக்கியம்மாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது வயிற்றில் நான்கு குழந்தைகள் இருப்பது உறுதியானது.

ஆனால், இசக்கியம்மாளின் உடல்நிலை பலவீனமாக இருப்பதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு எடுத்தனர். இதையடுத்து, மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து நான்கு குழந்தைகளையும் போராடி காப்பாற்றினர். இதில் அவருக்கு 2 ஆண், 2 பெண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளின் எடை குறைவாக இருப்பதால் அவர்கள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது தாய் மற்றும் நான்கு குழந்தைகளின் உடல்நிலை சீராகி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாயையும், நான்கு குழந்தைகளையும் போராடி காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Previous articleசேலத்தில் பல கோடி ரூபாய் செம்மண் திருட்டு:!! மக்களுக்கு ஆளும்கட்சி மிரட்டல்!
Next articleவிவசாயிகளை வழி நடத்துவது அவர்களை சுற்றி இருக்கின்ற அரசியல்வாதிகள் தான் என்பதை விவசாயிகள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்…! ஜேபி நட்டா கருத்து…!