200 கோடி ரூபாய் வசூல்! தி கேரளா ஸ்டோரி திரைப்படம் சாதனை!!

Photo of author

By Sakthi

200 கோடி ரூபாய் வசூல்! தி கேரளா ஸ்டோரி திரைப்படம் சாதனை!!

Sakthi

200 கோடி ரூபாய் வசூல்! தி கேரளா ஸ்டோரி திரைப்படம் சாதனை!
பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உலக அளவில் பாக்ஸ் ஆபிசில் 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆகியும் இந்த திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த மே 5ம் தேதி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் சித்தி இட்னாணி, யோகிதா பிஹானி, சோனியா பலானி, அடா சர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை சன்ஸைன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்துள்ளார்.
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் கதையே திரைப்படத்தின் தடைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் காரணமாக அமைந்துவிட்டது. இருந்தும் இந்த திரைப்படத்திற்கு பாஜக கட்சியினர் சார்பாக ஆதரவு இருந்து கொண்டுதான் இருக்கின்றது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் போல இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த திரைப்படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று தி கேரளா ஸ்டோரி திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேற்று அதாவது மே 22ம் தேதி வரை 198.97 கோடி ரூபாய் வசூல் செய்திருந்த நிலையில் இன்று தி கேரளா ஸ்டோரி திரைப்படம் 200 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.