சர்க்கரை ஒரு கிலோ ரூ 200! பருப்பு அரை கிலோ ரூ.1000! உணவுப் பஞ்சத்தில் சிக்கிய நாடு!

Photo of author

By Rupa

சர்க்கரை ஒரு கிலோ ரூ 200! பருப்பு அரை கிலோ ரூ.1000! உணவுப் பஞ்சத்தில் சிக்கிய நாடு!

இந்த கொரோனா தொற்று இரண்டு வருடங்களாக மக்களை ஆட்டிப் படைத்தது.இந்த நிலையில் அனைத்து நாடுகளையும் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த தொற்று காரணத்தினால் உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு ஏற்றுமதி-இறக்குமதி போன்றவை தடை செய்யப்பட்டிருந்தது. இந்த காரணங்களினால் அனைத்து நாடுகளும் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அந்தவகையில் தற்போது இலங்கை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

வர்த்தகம் மற்றும் நிதி பற்றாக்குறையால் இலங்கை அரசு தற்பொழுது பெரும் அவதிப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி விலைவாசி அதிக அளவு உயர்ந்து காணப்படுகிறது. அதனால் இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ சர்க்கரையின் விலை ரூ 200 க்கும் மேலாக விற்கப்பட்டு வருகிறது. அதேபோல ஒரு கிலோ பருப்பின் விலை ரூ 2000 என்ற அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது. இதனை ஈடு செய்ய இதர நாடுகளும் உதவி செய்து வருகின்றது.

தற்பொழுது வரை பணவீக்கத்தின் அளவு 11.1 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. அதேபோல இலங்கையில் அந்நிய செலவாணியை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு ஜிடிபி மதிப்பு -6.3 ஆக வீழ்ச்சியடைந்தது. அதன்காரணமாக தற்போது இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மூன்று வேளை உணவு உண்டவர்கள் அனைவரும் தற்பொழுது ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு வாழ்ந்து வருகின்றனர்.

அத்தியாவசிய பொருள்களை தற்போது விலை உயர்ந்து காணப்படுவதால் அங்கு உள்ள பாமர மக்கள் அனைவரும் வாழ்க்கை நடத்துவதே கேள்விக்குறியாக உள்ளது.இவ்வாறு உணவு சாப்பிடுவதற்கே பஞ்ச சூழல் நிலவி வருவதால் அதுகளவு கொள்ளை கொலை சம்பவங்கள் தினந்தோறும் அதிகரித்து வருகிறது.மக்கள் அனைவரும் 100% இயற்கை விவசாயத்தை பின்பற்றுமாறு இலங்கை அரசு கூறியுள்ளது.