சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கம் 

Photo of author

By Savitha

சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு வேலூர் மண்டலத்தில் இருந்து 200 சிறப்பு பஸ்கள்! நாளை முதல் 2 நாட்கள் இயக்கப்படுகிறது – பக்தர்களின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்! போக்குவரத்து அதிகாரிகள் தகவல்.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகம் மட்டுமின்றி, பிறமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி நாளை (வியாழக்கிழமை) இரவு 11.59 மணிக்கு தொடங்கி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) இரவு 11.33 மணிக்கு நிறைவடைகிறது. இதையொட்டி சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி,வேலூர் மண்டல அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் வேலூர் மண்டலத்தில் இருந்து மொத்தம் 200 சிறப்பு பேருந்துகள் நாளை காலை முதல் 2 நாட்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. மேலும், பக்தர்களின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதலாக திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.