தமிழகம் முழுவதும் டிசம்பர் 15ம் தேதிக்குள் 2,000 மினி கிளினிக் தொடங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான தளர்வுகள் குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர்
எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனைக்குப் பின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,
https://twitter.com/CMOTamilNadu/status/1332581083821473794?s=20
ஏழை, எளிய மக்களுக்காக தமிழகம் முழுவதும் தலா 1 மருத்துவர், 1 செவிலியர் மற்றும் 1 உதவியாளர் கொண்ட 2,000 மினி கிளினிக் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முன்பே அறிவித்த நிலையில், வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் இந்த மினி கிளினிக் துவங்கப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் 2,000 மெனி கிளினிக் தொடங்கப்படுவதன் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.