மாற்று திறனாளின் குடும்பத்திற்கு ரூ 2000.. தமிழக அரசின் புதிய திட்டம் அறிவிப்பு!!

0
211
2000 rupees for the family of differently abled.. Tamil Nadu government's new scheme announcement!!
2000 rupees for the family of differently abled.. Tamil Nadu government's new scheme announcement!!

மாற்று திறனாளின் குடும்பத்திற்கு ரூ 2000.. தமிழக அரசின் புதிய திட்டம் அறிவிப்பு!!

மாற்று திறனாளிகளுக்கு பயன்படும் வகையில் பல நலத்திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. அதில் தமிழக அரசால் நிதி உதவி என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாற்று திறனாளிகளின் குடும்ப வாரிசுகளுக்கு பயன் பெரும்.

இது அவர் இறந்த பிறகு அவருக்கு செய்யப்டும் இறுதி சடங்குகள் போன்றவைகளுக்கு பயன்படும். இதற்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தொகை ரூ.2000. இது அவருடைய வந்கிகணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இது அவர்களின் குடும்பங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இதை பெறுவதற்கு சில நிபந்தனைகள் உள்ளன.

முதலில் அவர் மாற்று திறனாளிகள் நல அலுவலகத்திற்கு சென்று அதற்கான விண்ணப்பதை பெற்று அதை நிரப்ப வேண்டும். நிரப்பியவை சரியாக இருக்கும் பட்சத்தில் அதில் கேட்கப்படும் அனைத்து ஆவணங்களின் நகலை இணைத்து அலுவலரிடம் கொடுக்க வேண்டும். பின்பு அலுவலர் அதை சரிபார்த்த பிறகு செயல்முறைபடுத்துவார். அதன் பிறகு அடையாள அட்டை வழங்கப்படும்.

இதில் தேவைப்படும் ஆவணங்கள் வாரிசு சான்றிதழ் இது இறந்தவரின் அதிகாரபூர்வ வாரிசா என அடையாளம் காண பயன்படும். இறப்பு சான்றிதழ் இது மற்றுதிறனாளி அவர்கள் இறந்தாரா இல்லையா என்பதை உறுதி செய்ய பயன்படுகிறது மற்றும் மாற்று திறனாளிகள் நல வாரியத்தால் வழங்கப்படும் அடையாள அட்டை நகல் போன்றவை தேவைப்படும் ஆவணங்கள் ஆகும். இது அவர் மாற்று திறனாளிகள் நல வாரியத்தில் உறுப்பினரா இல்லையா என்பதை உறுதி செய்ய பயன்படும். இவை அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் இறந்தவரின் சட்ட பூர்வ வாரிசுக்கு ரூ.2000 வழங்கப்படும்.