புத்தாண்டில் மாஸ் காட்ட போகும் 4 ராசிக்காரர்கள் !!! 2020 புத்தாண்டு ராசிபலன்.

Photo of author

By Parthipan K

ஒவ்வொரு நாளும், நமக்கு நல்லதாகவே இருக்க வேண்டும், என்ற எண்ணம் இல்லாத மனிதன்  இருக்கவே முடியாது, ஒரு நாளுக்கே இந்த எதிர்பார்ப்பு என்றால், புது வருடம் என்றால் சொல்லவே தேவையில்லை.

புத்தாண்டு பிறக்கயிருக்கும் நிலையில் அனைவரின் மனதிலும் எழும் மிகப்பெரிய கேள்வி, வரும் ஆண்டு நமக்கு எப்படி இருக்கும் ? 

2020ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சனிபகவான் தனுசு ராசியில் இருந்து ஆண்டின் முதலில் ஜனவரி 24ஆம் தேதி மகரம் ராசிக்கு நகர்கிறார். மிதுனத்தில் உள்ள ராகு 18.09.2020 அன்று இரவு 8.45 மணி ரிஷப ராசிக்கு நகர்கிறார். தனுசு ராசியில் உள்ள கேது விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குருபகவான் தனுசு ராசியில் இருக்கிறார். 2020 மார்ச் 30ஆம் தேதியன்று மகர ராசிக்கு செல்கிறார். ஜூன் 30ஆம் தேதிவரை மகர ராசியில் சஞ்சரிப்பார். பின்னர் வக்ரமடைந்து தனுசு ராசிக்கு வரும் குருபகவான் நவம்பர் வரை தனுசு ராசியில் சஞ்சரிப்பார்.

இந்த கிரஹ மாற்றங்கள் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு வகையான பலன்களை தர இருக்கிறது. அதிர்ஷ்ட காற்று வீச போகும் 4 ராசிக்காரர்கள் பற்றி பார்ப்போம்.

மேஷம்:

 ராசிக்கு லாப வீடான 11-ம் வீட்டில் இந்த ஆண்டு பிறப்பதால் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். எதையும் தைரியமாகச் செயல்படுத்துவீர்கள். ஆழ்மனத்திலிருந்த பயம் நீங்கும். புது வீட்டில் குடிபுகுவீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சகோதரர் சகோதரிகள் உதவுவார்கள். வழக்கில் வெற்றி உண்டு. பழைய வாகனத்தைத் தந்துவிட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். 26.12.2020 வரை சனி பகவான் உங்களின் ராசிக்கு 9-ம் வீட்டில் நிற்பதால் தொட்டது துலங்கும். பயணங்கள் அதிகரிக்கும். குரு உங்களின் ராசிக்கு 9-ம் வீட்டில் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிதுர்வழி சொத்துகள் கைக்கு வரும். அயல்நாட்டிலிருக்கும் தோழிகள், உறவினர்களால் அனுகூலம் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

பரிகாரம் : சனிக்கிழமை சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபடலாம்.

மிதுனம்:

 ராசிக்கு 9-ம் வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் கலங்கிப்போயிருந்த மனத்தில் தெளிவு பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். அயல்நாடு சென்று வருவீர்கள். தந்தைவழிச் சொத்துகள் கைக்கு வரும். பிள்ளைகளைப் பயிற்சி வகுப்பில் சேர்ப்பீர்கள். 26.12.2020 வரை சனி 7-ம் வீட்டில் நின்று கண்டகச் சனியாக இருப்பதால், கணவன் மனைவி வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். குரு பகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்ப்பதால் மறைந்துகிடந்த திறமைகள் வெளிப்படும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்குக் கூடிவரும். கணவர் உங்களின் புத்திசாலிதனத்தைப் பாராட்டுவார். வியாபாரத்தில் விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிக்க வேண்டிவரும். புதிய இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கட்டளைகளை அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். சக ஊழியர்களிடம் வளைந்துகொடுத்து போவது நல்லது.

பரிகாரம் : தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபடவும்

சிம்மம்:

ராசியைச் சந்திரன் பார்த்துக்கொண்டிருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. இழந்த செல்வம், செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். மாமனார் மாமியார் வகையில் மகிழ்ச்சி தங்கும். 12.11.2020 வரை குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்பதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். 13.11.2020 முதல் வருடம் முடியும் வரை குரு 6-ம் வீட்டிலேயே மறைவதால் வேலைச்சுமை அதிகரிக்கும். ஆகஸ்ட் மாதம் வரை உங்களின் ராசிக்கு 5-ம் வீட்டில் கேது நிற்பதால் பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். பங்குச் சந்தை மூலம் பணம் வரும். செப்டம்பர் மாதத்தில் கேது 4-ம் வீட்டிலும் ராகு 10-ம் வீட்டிலும் இருப்பதால் சில விஷயங்களில் அனுசரித்துப்போவது நல்லது. வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்கும்..

பரிகாரம் : செவ்வாயில் முருகனுக்கு பால் அபிஷேகம்.

கும்பம்:

ராசிநாதன் சனி பகவான் லாப வீட்டில் அமர்ந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் புதிய பொறுப்பும் பதவியும் தேடி வரும். திடீர் யோகம், பணவரவு, அந்தஸ்து வரும். பங்குச் சந்தை மூலம் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளுபடி விற்பனையால் லாபம் கூடும். கடையை விரிவுபடுத்துவது குறித்து யோசிப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். உங்கள் ராசியிலேயே இந்த ஆண்டு பிறந்திருப்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சிக்கனமாக இருப்பது நல்லது. எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கணவரின் புது முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். வங்கியில் அடமானமாக வைத்திருந்ததை மீட்பீர்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே சென்று திருத்துவது நல்லது. உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். சக ஊழியர்களிடம் எல்லா ரகசியங்களையும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

பரிகாரம் : பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் அபிஷேகம்.