2024 ஐபிஎல் : டெல்லி அணியின் கேப்டன் குறித்த விவரம் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!

0
293
#image_title

2024 ஐபிஎல் : டெல்லி அணியின் கேப்டன் குறித்த விவரம் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!

ஆண்டுதோறும் இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டின் ஐபிஎல் போட்டி வரும் 22ம் தேதி முதல் துவங்கவுள்ளது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் பெரும் விபத்தில் சிக்கினார். அதன் காரணமாக அவரால் 2023ம் ஆண்டின் ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாமல் போனது. அவரது இடத்தினை டேவிட் வார்னர் நிரப்பினார்.

அதன்படி, இந்தாண்டும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னரே தொடருவார் என்று ஓர் எதிர்பார்ப்பு இருந்து வந்துள்ளது. ஆனால் இதற்கிடையே, ரிஷப் பண்ட் உடல்நலம் சீராகி மீண்டும் இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட தயாராகி வந்துள்ளார். அதனால் இவர்களுள் யார் இந்த டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்கள் என்னும் கேள்வி எழுந்தது.

குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இறுதியாக டெல்லி அணியின் நிர்வாகம், ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இச்செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இப்போட்டியின் துவக்க விழாவும், முதல் போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள நிலையில், ரசிகர்கள் அதனை காண மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதொடர்ந்து உயரும் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!!
Next articleமறுபடியும் பாஜகவில் இணைந்தார் தமிழிசை சௌந்திரராஜன்!!