கோலிவுட்டில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது. ஆனால், அவை எல்லாமே வெற்றி பெறுவது இல்லை. இதிலும் பல கோடிகளில் திரைப்படங்கள் உருவாகி வருகிறது. 2024ம் வருடம் வருடம் தமிழ் சினிமாவில் உருவான படங்களின் மொத்த பட்ஜெட் 1000 கோடிக்கும் மேல். ஆனால், அதில் வெற்றிப்படங்கள் மிகவும் குறைவு. கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஒரு வருடத்தில் வெளியாகும் படங்களில் பெரும்பாலும் வெற்றிப்படங்களாக அமைந்துவிடுகிறது.
அதற்கு காரணம் அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதைகள்தான். குறிப்பாக மலையாளத்தில் சிறப்பான, ரசிக்க வைக்கும் திரைப்படங்களை இயக்குகிறார்கள். அதனால்தான் அவர்களால் வெற்றி பெற முடிகிறது. ஆந்திராவை பொறுத்தவரை அங்குள்ள ரசிகர்கள் சினிமா பார்ப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்படி இல்லை. படம் நன்றாக இருந்தால் மட்டுமே அந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு கொடுப்பார்கள்.
ஒரு படத்தில் நஷ்டம் என்றால் அடுத்த படத்தில் லாபம் எடுப்போம் என்கிற நம்பிக்கையில்தான் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து படங்களை எடுத்து வருகிறார்கள். சினிமா எடுப்பது கூட ஒரு வகையில் சூதாட்டம்தான். எப்படியாவது லாபத்தை எடுத்துவிட வேண்டும் என்கிற நோக்கில் தொடர்ந்து படங்களை தயாரிப்பாளர் எடுத்து கொண்டே இருக்கிறார்கள்.
2025ம் ஆண்டை பொறுத்தவரை கடந்த 3 மாதங்களில் 72 படங்கள் வெளியாகியுள்ளது. இதில் மதகஜராஜா, டிராகன், குடும்பஸ்தன் உள்ளிட்ட 5 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. வீர தீர சூரன் படத்தின் உண்மையான வசூல் என்ன என்பது தெரியவில்லை. ஏனெனில் படம் வெளியாகி ஒரு வாரம் ஆகியும் 35 கோடியை மட்டுமே இப்படம் வசூல் செய்திருக்கிறது. 72 படங்களில் 7 சதவீத படங்கள் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.