2025 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்காக வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. இதில் சில நட்சத்திர வீரர்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
18-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதற்கான மெகா ஏலம் இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. இதற்காக தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு அணியும் அக்டோபர் 31 மாலையில் ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டுமென ஏற்கனவே காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அணியும் குறைந்த பட்சம் 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம். அதன்படி ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை நேற்று மாலை அறிவித்து விட்டன.
இதில் சில நட்சத்திர வீரர்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்; தோனி, ருத்ராஜ் கெய்க்குவாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, மதிஷா பத்திரணா போன்றோர் தக்கவைக்கப்பட்டு உள்ளனர்.
தீபக் சாகர், ரச்சின் ரவீந்தரா, டேரில் மிச்சல், கான்வே, சான்ட்னெர், போன்ற நட்சத்திர வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், சந்திப் சர்மா, ஆகிய ஆரிவீர வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மேலும் அந்த அணியில் இருந்து டிரெண்ட், போல்ட் பட்லர், அஸ்வின், சாஹல், ஆவேஷ் கான், பர்கர் ஆகிய நட்சத்திர வீரர்கள் கழட்டிவிடப்பட்டுள்ளனர்.
குஜராத் டைட்டன்ஸ்;
ரஷித் கான், சுப்மன் கில், சாய் சுதர்சன், ராகுல் தெவாட்டியா, ஷாருக்கான், ஆகியோரை மட்டும் தக்கவைத்து மில்லர், வில்லியம்சன், ஆகிய நட்சத்திர வீரர்களை நீக்கிவிட்டது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்;
விராட் கோலி, ரஜித் படிதார், யாஸ் தயாள், ஆகிய வீரர்கள் தக்கவைக்கப்பட்டு பாப் டு பிளெஸ்சிஸ், வில் ஜேக்ஸ், மேக்ஸ்வெல், சிராஜ், கேமரூன் கிரீன், பெர்குஷன், ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ்;
ஜஸ்பிரீத் பும்ரா, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா,ரோஹித் சர்மா, திலக் வர்மா, ஆகியோரை தக்க வைத்து நட்சத்திர வீரர்களான இஷான் கிஷன், டிம் டேவிட், கோட்சே ஆகியோரை நீக்கி உள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ்;
அந்த அணியின் கேப்டனான ரிஷப் ஃபண்ட், கடந்த சீசனில் அதிரடியாக கலக்கிய ஜேக் பிரெசர், மெக்கர்க், ஆண்ட்ரிச் நோர்ஜே, பிரித்வி ஷா, மற்றும் வார்னர் ஆகியோரை கழட்டிவிட்டு அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன், ஸ்டப்ஸ், அபிஷேக் போரல், ஆகியவரை தக்கவைத்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ்;
சசாங்க் சிங், பிரப்ஷிம்ரன், ஆகிய இருவரை மட்டும் தக்கவைத்து ஸ்டிக்கர், ஷிகர் தவான், அர்ஷ்தீப் சிங், ரபடா, பேர்ஸ்டோவ், சிக்கந்தர் ராசா, லியாம் லிவிங்ஸ்டன், மற்றும் ஷாம் கர்ரன் ஆகியோரை கழட்டியுள்ளது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்;
ஹென்ரிச் கிளாசென், கம்மின்ஸ், அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், நிதிஷ் குமார் ரெட்டி, ஆகியோரை தக்க வைத்து புவனேஸ்வர் குமார், நடராஜன், கிளென் பிலிப்ஸ், ஆகியோரை கழட்டி விட்டது அதிர்ச்சி அளித்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்:
நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், மொஷின் கான், ஆயுஷ் பதோனி, ஆகியோரை வைத்துக்கொண்டு கே.எல்.ராகுல், டி காக், மேயர்ஸ் ஸ்டோயினிஸ், ஹூடோ, குருனால் பாண்ட்யா, ஆகிய நட்சத்திர வீரர்களை நீக்கியுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்;
ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன், ஆண்ட்ரே ரசல், ஹர்சித் ராணா, ஆகியோர் தக்க வைக்கப்பட்டு ஸ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ரானா, வெங்கடேஷ் ஐயர், குர்பாஸ், ஸ்டார்க், ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.