2025 தை அமாவாசை: கஷ்டங்கள் தீர வாழ்க்கையில் வெளிச்சம் பிறக்க மறக்காமல் இதை மட்டும் செய்யுங்கள்!!

Photo of author

By Divya

தமிழ் மாதங்களில் ஆடி மற்றும் புரட்டாசி அமாவாசை எவ்வளவு சிறப்பு வாய்ந்ததோ அதேபோல் தான் தை அமாவாசையும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.நாளை தை அமாவாசை நாள் வர உள்ள நிலையில் அந்நாள் பற்றிய சிறப்பை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

தமிழ் மாதங்களில் வரும் அமாவாசையில் மிகவும் புனித நாளாக இந்நாள் திகழ்கிறது.இந்நாளில் பித்ருக்களை வழிபட்டால் அவர்களின் ஆசி நமக்கு முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்.தை அமாவாசை நாளில் பித்ருக்களை வணங்குவதால் அவர்களின் ஆன்மா மீண்டும் பித்ருலோகத்திற்கு செல்லும் என்பது அனைவரின் நம்பிக்கை.

இந்நாளில் புனித நீராடினால் நம்மை விடாமல் துரத்தி வரும் கர்மவினைகள்,சாபங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.தமிழ் மாதத்தில் வரும் மற்ற அமாவாசைகளை விட இந்த தை அமாவாசைக்கு என்று தனி சிறப்பு இருக்கிறது.இந்நாளில் நாம் சில விஷயங்களில் ஈடுபட்டால் நம் மோசமான தலையெழுத்து கூட நொடியில் மாறிவிடும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

மோசமான தலையெழுத்தால் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நபர்கள் இந்நாளில் அதிகாலை நேரத்தில் பித்திருக்களை வணங்கிவிட்டு புனித நீராடினால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.இந்நாளில் மொட்டை மாடிக்கு சென்று அபிராமி அந்தாதி பாடலை வானத்தை நோக்கி பாடினால் மனதார வழிபட வேண்டும்.

இவ்வாறு செய்தால் உங்களை சுற்றியுள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.வாழ்க்கையில் துன்பத்தை மட்டுமே சந்தித்து வரும் நபர்கள் இந்த தை அமாவாசை தினத்தில் கடவுளை மனமுருகி வழிபட்டால் எப்பேர்ப்பட்ட துன்பங்களும் காணாமல் போய்விடும்.

தை அமாவாசை நாளில் பித்ருக்களை வணங்கினால் தங்கள் தலைமுறைக்கு விடுபட்ட சாபம் மொத்தமும் காற்றில் கரைந்து போய்விடும்.தை மாதத்தில் வருகின்ற முக்கிய நாளாக இந்த அமாவாசை உள்ளது.இந்த தை அமாவாசை ஜனவரி 29 ஆம் தேதி அன்று வருகிறது.காலை 7:52 மணிக்கு தொடங்கும் அமாவாசை மாலை 6:28க்கு முடிவடைய இருக்கிறது.

அமாவாசை திதி கொடுக்க உகந்த நேரம்:

ஜனவரி 29 ஆம் தேதி அதிகாலை 4 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை அமாவாசை திதி கொடுக்கலாம்.