2026 சட்டமன்ற தேர்தல்: முதல்வராகும் உதயநிதி.. கட்டாயம் இது நடக்கும்!! உறுதி கொடுத்த அமைச்சர்!!

0
225
2026 Assembly Election: Chief Minister Udayanidhi.. It will definitely happen!! The minister who promised!!
2026 Assembly Election: Chief Minister Udayanidhi.. It will definitely happen!! The minister who promised!!

DMK: திமுக அமைச்சரவையில் மாற்றம் வரப்போகிறது என்றும் துணை முதல்வராக உதயநிதி பதவி வகிக்கப் போகிறார் என்ற பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கும் பொழுதே தற்பொழுது அமைச்சர் பொன்முடி உதயநிதி முதல்வராக போகிறார் என கூறியது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்திலிருந்து பதினொன்றாம் வகுப்பிற்கு செல்லும் மாணவர் மற்றும் மாணவிகள் அனைவருக்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருடந்தோறும் இது வழங்கப்படுகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழாவில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டுள்ளார். அதில் பேசிய அமைச்சர், இக்காலகட்ட மாணவர்கள் அதிக அளவில் செல்போன் உபயோகிக்கின்றனர். இதற்கு மாறாக அறிவை வளர்த்துக் கொள்ளும் புத்தகங்களை தேடி படிக்க வேண்டும். நாட்டு நடப்பை அறிய தினம்தோறும் செய்தித்தாள்கள் போன்றவற்றை படிப்பதோடு அதன் மூலம் அறிவையும் வளர்த்துக் கொள்ள முடியும்.

அதேபோல மாணவர்களின் இடைநிற்றல் போன்ற பிரச்சனைகளை தவிர்க்க தான் தமிழக அரசு பல நலத்திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. இதன் தலையாய நோக்கமே எல்லோருக்கும் கல்வி என்பதுதான் இதனை மாணவர்கள் சரியான முறையில் உபயோகித்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல உதயநிதி முதல்வராக ஆட்சியில் உட்காரும்பொழுது அனைத்து மாணவர் மற்றும் மாணவிகளுக்கும் இலவச இருசக்கர வாகனம் வழங்கப்படும். எதிர்கால காலம் வரும் என்று கூறியுள்ளார். தற்பொழுது அமைச்சர் இவ்வாறு பேசியது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி வாரிசு அரசியலை இதை அப்பட்டமாக வெளிப்படுத்தி காட்டுகிறது.